Abstract:
தனியார் வகுப்புக்கள் என்பது பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக அறிவினையும்
தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் பணம் செலுத்திக் கற்கும்
ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கல்விசார் அமைப்பாக செயற்பட்டு வருகின்றது. இலங்கையில்,
1931ஆம் ஆண்டிலிருந்து இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தி தொடர்சியாகக்
பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசமாக
மாணவர்களுக்கு வழங்குகின்ற போதும், மாணவர்கள் தனியார் வகுப்;புக்களை
நாடுகின்றமை அதிகரித்து வருகின்றது. இவ்விடயங்களை அடிப்படையாகக் கொண்டு,
இலங்கையில் தனியார் வகுப்புக்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் பின்னணியில்
எவ்வாறான காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதை அடையாளம்
காண்பது ஆய்வின் நோக்கமாகும். ஆய்வின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்;காக
நோக்கமாதிரி ஆய்வுக்கான மாதிரியாக தெரிவுசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகையில், இலங்கையில் தனியார் வகுப்புக்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட
ஆய்வுகைளை அடிப்படையாகக் கொண்;டு ஆய்வுக்குத் தேவையான தரவுகள்
தெரிவுசெய்யப்பட்டன. இவ்வாய்வானது பண்புசார் ஆய்வுவாக அமைந்துள்ளது.
அதனடிப்படையில் இரண்டாம் நிலைத்தரவு சேகரிப்பு முறைகளினூடாக இவ்
ஆய்வுக்கான தரவுகள் பெறப்;பட்டன. அந்தவகையில் அறிக்கை, புத்தகங்கள், ஆய்வுக்
கட்டுரைகள் மற்றும் இணையத்தள தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டன. இத்
தரவுகளின் பகுப்பாய்வின் மூலம் இலங்கையில் தனியார் வகுப்புக்கள் உருவாகி
வளர்ச்சியடைவதில் செல்வாக்குச் செலுத்திய கல்விப் பின்னணி, பொருளாதாரப்
பின்னணி மற்றும் அரசியல் பின்னணிகள் என்பவற்றினை ஆய்வானது கண்டறிந்து
பகுப்பாய்வு செய்துள்ளது.