Abstract:
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு
வகையில் வழிகாட்டி நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஊக்குவிப்பானது
நடத்தைகளை செயற்படுத்தும் காரணிகளை மாத்திரம் குறிக்காது. மாறாக
இலக்கு நோக்கிய செயற்பாடுகளை இயக்குகின்ற, பராமரிக்கின்ற
காரணியாகவும் காணப்படுகின்றது. ஒரு மனிதன் ஒரு காரியத்தை
செய்வதற்கு அடிக்கடி ஊக்கப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
இதன்போது, அவர்கள் அக்காரியத்தை சிறப்பாக செய்வதற்கு இவ்வாறான
ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அவ்வகையில்
பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வானது
ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை
கண்டறிவதே இதன் நோக்கமாகும். இவ் ஆய்வு நோக்கத்தை
அடைவதற்காக விவரிப்பு ஆய்வு முறையியல் பயன்படுத்தப்படுகின்றது.
முதலாம் நிலை தரவுகள் வினாக்கொத்து, கலந்துரையாடல், அவதானம்
ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டன. இங்கு வினாக்கொத்தானது
எழுமாதிரியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தென்கிழக்குப்
பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 250 பேருக்கு வழங்கப்பட்டன
அவற்றுள் 200 வினாக்கொத்துக்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாம் நிலை
தரவுகள் ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய கட்டுரைகள்
போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் MS Excel
மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இலங்கை தென்கிழக்குப்
பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்திய இவ்வாய்வில் இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் அதிகமாக
நடைபெற்று உள்ளதோடு அதிகமான மாணவர்கள் அதில் உச்ச பயனைப்
பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதையும் கண்டறிய முடியுமாக உள்ளது.
அத்தோடு இவ்வாறான ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்கள்
தமது கல்வியை விருத்தி செய்வதாகவும் அவர்களின் இலக்கை நோக்கிய
பயணத்திற்கு வழிகோலுவதாகவும் அமைந்துள்ளமை இவ்வாய்வின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையில், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்படுத்திய
தாக்கமானது ஒரு இலக்கை நோக்கிய பயணத்தை காட்டக்கூடிய ஒரு
சாதகமான விளைவாகவே அமையப் பெற்றுள்ளது என்பதை இவ்வாய்வு
மூலம் அடையாளப்படுத்த முடிகிறது.