Abstract:
பாலின சமத்துவம் என்பது சுதந்திரம், சுயநிர்ணயம்,
சமயம், மொழி, பண்பாடு, கலாசாரம், கல்வி, சிந்தித்தல் போன்ற
விடயங்களை ஆண்களும் பெண்களும் சமனான அளவில் பெற்று
செயற்படலாகும். பண்பாடு தொடக்கம் மொழி வரையில் ஆணுக்கும்
பெண்ணுக்கும் சம அளவு உரிமை காணப்படல் அவசியமாகும். அதன்
அடிப்படையில் பண்பாடு, கலாசாரம், போன்றவற்றின் பால் சமத்துவம்
பேணப்படுவதைக் காணலாம். அவைதீகநெறி என போற்றப்படுகின்ற
இந்துசமயம் பல கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும்
எடுத்துக் கூறுகின்ற மதமாக காணப்படுகின்ற அதே வேளையில் ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையிலான சமத்துவ தன்மையினையும் கோட்பாடுகள்,
கொள்கைகள் ஊடாக வெளிக்காட்டுவதையும் காணலாம். இந்து பண்பாட்டு
கலாசார கோலங்களில் சடங்கு முறைகள் செல்வாக்கு பெற்றன. அவற்றுள்
மக்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த சடங்காக திருமணச்சடங்கு
காணப்படுகிறது. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைதலாகும்.
இந்து திருமணச்சடங்கு முறையில் பால் சமத்துவம் பேணப்டுவதை நாம்
காணலாம். திருமண நிகழ்வின் போது இடம்பெறும் சடங்குகள்,
சம்பிரதாயங்கள், கிரியைகள் ஊடாக பால் சமத்துவம் வெளிப்படுவதை
நோக்கலாம். ஆணும் பெண்ணும் இணையும் போது அவர்களிடையே
அனைத்து விடயங்களிலும் சமனான நிலை காணப்படும் போது தான்
அவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும். வாழ்வின் தொடக்கமாக
அமைவது திருமணம். திருமணம் வழியே ஆணுக்கும் பெண்ணுக்கும் பால்
சமத்துவம் பேணப்படுவது சிறப்பிற்க்குரியதாகும். இந்து திருமணச் சடங்கு
முறைகள் சம்பிரதாயங்கள், சடங்கு முறைகளின் அடிப்படையில்
நிகழ்வதாகும். அத் திருமணச் சடங்களில் ஆண் பெண் சமத்துவம்
பின்பற்றபடுகின்றதா? என்பது ஆய்வுப் பிரச்சினையாக கொள்ளப்படுகிறது.
திருமணச் சடங்கு முறைகளில் பால் சமத்துவும் பின்பற்றப்படுவதை
இனங்கண்டு வெளிப்படுதல் பிரதான நோக்கமாக கொள்ளப்படுகிறது. இவ்
ஆய்வில் பகுப்பாய்வு, விபரண ஆய்வு, வரலாற்று ஆய்வு, அடிப்படை ஆய்வு
போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண் பெண் சமத்துவம்
என்பது இருபாலாருக்கும் உரியதான உரிமையாகும். ஆணுக்கும்
பெண்ணுக்கும் தகுந்த சமமான உரிமை வழங்கப்படும் போது சமூகம்
நல்முறையில் உருவாகும்.