dc.description.abstract |
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவுப் பிரதேப் பாடசாலைகளில்
கட்டிளமைப் பருவ மாணவர்களிடையேயான வன்போக்கு நடத்தை பற்றிய ஒப்பீட்டு
உளவியல் ஆய்வு” இவ் உளவியல் ஆய்வானது கட்டிளம்பருவப் பாடசாலை
மாணவர்களில் வன்போக்கு நடத்தை காணப்படுகின்றதா? அந் நடத்தையில் மாவட்ட
ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றதா? என்பதனைக் கண்டறியவும் இம்
மாணவர்கள், வாய் மொழி ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ அல்லது
கோபத்தின் மூலமாகவோ, விரோதப்போக்குகளின் மூலமாகவோ
வன்போக்குநடத்தையை வெளிப்படுத்துகின்றனர், என்பதனை அறிந்து கொள்வதுடன்,
இம் மாணவர்களின் பெற்றோரின் நடவடிக்கைகள், குடும்ப சச்சரவுகள் என்பன
இவர்களின் வன்போக்கு நடத்தையைத் தூண்டுகின்றது என்பதனை அறியவும்,
அத்துடன் போதைப் பொருட்களின் பாவனை மற்றும் யுத்தத்தின் நேரடித்தாக்கம்
என்பனவும் வன்போக்குநடத்தையில் செல்வாக்குச் செலுத்துகின்று. என்பதனை
அறியவும், இத்தகைய வன்போக்கு நடத்தையில் பெற்றோர்களின் தொழில், சமயம்,
வாழும் இடம், மற்றும் அவர்கள் கல்வி கற்கும் வகுப்பு என்ற விடயங்கள் செல்வாக்கு
செலுத்தும் காரணிகளாக அமைகின்றது. என்பன தொடர்பாகக்கண்டறிவதுடன்,
வன்போக்கு நடத்தையுடைய மாணவர்களை எவ்வாறு கையாளலாம், மற்றும் இந்த
நடத்தையினால் ஏற்படும் பாதிப்புக்களைத் எவ்வாறு தவிர்க்கலாம், அல்லது
குறைக்கலாம், போன்ற ஆலோசணைகளை வழங்குதல், மற்றும் மேலும் சில
தீர்வுகளை முன்வைக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டது. இவ் விடயங்களின்
அடிப்படையிலேயே ஆய்வின் கருதுகோள்களும், அத்தியாயங்களும்
வகுக்கப்பட்டுள்ளது. |
en_US |