Abstract:
கல்வி என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன
வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு
சமூக அமைப்பு ஆகும். கல்வி என்ற சொல் கல் என்ற வேர்ச் சொல்லிலிருந்து
வருகின்றது. கல்வியாளர்கள் கூற்றின் படி இளைய தலைமுறையை முறையாக
வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி
முக்கிய பங்கு வகிக்கின்றது. கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும்
தொடர்கிறது. ஆனால் மனிதர்கள் குழந்தைப் பருவத்தில் கல்வி கற்கும் போது
முழுமையான பரிணாமம் அடைந்த மனிதனாகவும் சமுதாயத்திற்கு
உதவிகளை அளிக்கும் மனிதனாகவும் மாற்றம் அடைகின்றான்.
சான்றோர்களின் கூற்றின் படி இளைய தலை முறையை முறையாக வழி
நடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய
பங்கு வகிக்கிறது. ஆரம்ப காலங்களில் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல்
மாணவர்கள் சமத்துவமாக காணப்பட வேண்டும் என்பதற்காக குருகுலகல்வி
வழங்கப்பட்டது. கல்வியின் ஆங்கில வடிவமான நுனரஉயவழைn ஆனது
நனரஉயவழை எனும் இலத்தின் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. இது
வளர்தல் எனும் பொருளை குறிக்கிறது. கல்வியின் உள்ளார்ந்த
எண்ணக்கருக்களை ஆராயும் நோக்கில் உபநிடதங்களில் கல்வி பற்றிக்
கூறப்பட்டுள்ளன. தைத்திரிய உபநிடதத்தில் கூறப்பட்ட கல்விக் நடைமுறைகள்
தற்காலக் கல்வி நடைமுறையில் பின்பற்றப்படுகின்றதா? ஏன்பதும் இவ்விரு
நடைமுறைகளும் அடிப்படையில் ஒத்த தன்மைகளைக் கொண்டனவா?
என்பதும் ஆய்வுப் பிரச்சினைகளாக அமைந்தன. உபநிடதங்களில்
பல்வேறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்ட போதிலும் இவற்றின் கல்விச்
சிந்தனைகள் அவற்றின் நோக்கங்கள் பற்றி இது வரையிலும்
ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடைவெளியினை அடிப்படையாகக்
கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில்
உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள கல்விக் கருத்துக்களை இனங்காண்பதோடு
தற்கால கல்வி நடைமுறைகளையும் இனங்கண்டு உபநிடதத்தில் கூறப்பட்ட
கல்வி நடைமுறைகளிலிருந்து தற்கால கல்வி நடைமுறைகள் எவ்வாறு மாற்றம்
அடைந்துள்ளது என்பதனை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கங்களாகும்.
இவ் ஆய்வில் ஒப்பிட்டு விபரண ஆய்வு முறை, வரலாற்று ஆய்வு முறை,
பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்பட உள்ளன. கல்வி கற்றலின் பயன்
கல்வி கற்றலின் முக்கியத்துவம், கல்வி வழங்கும் முறைகள் கல்வி
செயற்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்பவற்றின் வாயிலாக உபநிடதக்
கல்வி தற்கால கல்வி எனும் இரு கல்வி நடைமுறைகளும் மக்கள் மனங்களில்
பலவகையாக எண்ணக்கருக்களை விதைக்கின்றன.