Abstract:
திருமணம் என்பது திருமணம் என பகுக்கப்பட்டு திரு
என்பது தெய்வீகத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும்
மேன்மையான தெய்வத்தன்மையுடன் இணைதல் என பொருள்படும் மற்றும்
திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சட்ட ரீதியான
ஓர் அமைப்பு முறையாகும். ஆரம்பகால இந்து திருமணம் எனும் போது பண்டைத்
தமிழர் தம் வாழ்க்கையில் கற்பொழுக்கம், கழவொழுக்கம் என்ற அடியில்
பொருள் கொடுத்தும், சேவை செய்தும், மணத்தல் திறமையை வெளிக்காட்டும்
வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல், தன் காதல்
மிகுதியை காட்டி மணத்தல் போன்ற இவ்வகை திருமண முறைகள் காணப்பட்டன.
தற்கால இந்து திருமணம் எனும் போது பாரம்பரியத்திலிருந்து நழுவி இன்றைய
அவசரம் நிறைந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் இணையதளங்களில்
பார்த்து அதிலேயே பேசி திருமணம் செய்யும் நாகரிகமான வகையில்
காணப்படுகின்றது. இவ்வாறு திருமணத்தை ஆய்வு ரீதியாக ஆராயும் போது
ஆரம்ப இந்து திருமண சடங்கு முறைகளுக்கும் தற்கால இந்து திருமண சடங்கு
முறைகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்தோடு
ஆரம்ப கால திருமண நடைமுறைகளை வட இந்திய, தென்னிந்திய வரலாற்று
காலங்கள் இலக்கியங்கள் வாயிலாக அறிவது அவசியமாகும். தற்கால திருமண
நடைமுறைகளை நாம் நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள
நடைபெறும் ஒப்பந்தம் ஆகும். ஆரம்பகாலம் முதல் தற்காலம் வரை திருமணம்
முக்கியப் படுத்தப்பட்டுள்ள ஒரு வாழ்வியல் சடங்காகும். அவற்றை தற்போது
நடைமுறைப்படுத்துவதில் பல மாற்றங்கள் நவீனமயமாகி வந்துள்ளன. ஆகவே
ஆரம்ப கால திருமண நடைமுறைகளை பின்பற்றி தற்கால திருமண
நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நவீனமயப்படுத்தப்பட்ட காலமாக
இது விளங்குவதால் திருமண நடைமுறைகள் மற்றும் சடங்குகளில் பல்வேறு
மாற்றங்கள் எதிர் நோக்கப்படுகின்றது. அத்தோடு மக்கள் பாரம்பரியத்தை
அறியாமல் இருப்பது இவ்வாய்வில் பிரச்சினையாக கருதப்படுகின்றது.
திருமண சடங்குகள் தொடர்பாக பல்வேறுபட்ட ஆய்வுகள் இடம்பெற்ற போதிலும்
பண்டைய இந்து திருமணச் சடங்குகளுக்கும் தற்கால திருமணச் சடங்குகளுக்கும்
இடையிலான வேறுபாடுகள் பற்றி எந்த ஒரு ஆய்வும் இடம்;பெறவில்லை. ஆகவே
இவ் ஆய்வு இடைவெளியினைப் பூரணப்படுத்ம் முகமாக இவ் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பகால இந்து திருமணச்சடங்குகளுக்கும் தற்கால இந்து
திருமணச்சடங்குகளுக்கும் இடையிலான இடைவினைகளே அடையாளம்
காணுதல் பிரதான நோக்கமாகவும் ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலம் வரை
திருமண சடங்குகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ள விதம், தற்கால திருமணச்
சடங்குகள் ஆரம்ப கால திருமணச் சடங்குகளில் இருந்து எவ்வாறு
வேறுபடுகின்றது என்பதை இனங்காணல் மற்றும் திருமணங்களில்
நவீனத்துவத்தினால் பாரம்பரியங்களை மறந்த நிலை என்பவற்றினை சமூக
மக்களுக்கு எடுத்துரைத்தல் துணை நோக்கங்களாகவும் கருதப்படுகின்றது