dc.description.abstract |
இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் பெருங்கற்காலப்
பண்பாட்டின் பரவல் புதிய கால கட்டத்தின் தொடக்கமாக அல்லது திருப்பு
முனையாக அமைந்ததெனக் கூறலாம். பெரிய கற்களை தமது சவஅடக்க
முறைகளுக்கு பயன்படுத்தியமை காரணமாக பெருங்கற்காலம் என
அழைக்கப்படுகின்றது. இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு தொடர்பான
சான்றுகள் 1889 களில் இருந்து தெரிய வந்திருந்தாலும் நாகரீக உருவாக்கத்தில்
அப் பண்பாடு பெறும் முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் 1970களின்
பின்னரே உருவாக்கப்பட்டது. இலங்கையில் கடந்த இரு சகாப்த காலங்களில்
50க்கும் மேற்பட்ட இடங்களில் இப் பண்பாடு பற்றிய சான்றுகள்
கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு முக்கிய மையமாக இபன்கட்டுவ
பெருங்கற்கால மையம் அமைவு பெறுகின்றது. இம் மையம் மத்திய மாகாணத்தின்
மாத்தளை மாவட்டத்தின் கலகவல பிரதேசத்தில் அமைந்துள்ளது. இம் மையத்தின்
சிறப்பியல்பே 2500 வருட காலத்திற்கு முன்னைய இடுகாட்டுப் பரப்பு
கண்டறியப்பட்டமையாகும். இங்கு இரண்டு சவ அடக்க முறைகளான கல்லறைகள்,
ஈமத்தாழிகள் என்பன முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அத்துடன் பண்டைய
கால சமூகத்தில் மக்கள ; இறந்ததற்குப் பின்பு அவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழ் நாளில் பயன்படுத்திய
பொருட்களை அவர்களின் இறந்த உடலுடன் சேர்த்து புதைத்தனர். இதனால்
பல்வேறு வகையிலான சவ அடக்க முறைகளை பின்பற்றியிருந்தனர். அவற்றுள்
கல்லறைகள், கற்திட்டைகள், தாழிகள் என்பன முக்கியம் பெறுகின்றன.அவ்வகையில்
இவ் இபன்கட்டுவ மைய அகழ்வாய்வில் இறந்தவர்களுக்கான சவ அடக்க
முறைகளுடன் பல்வேறு வகையான தொல்லியல் சான்றுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மட்பாண்டங்கள், சிறிய அளவிலான சட்டிகள்,
கலசங்கள், பானைகள், குவளைகள், வட்டில்கள், கறுப்பு சிவப்பு நிற
மட்பாண்டங்கள், பல்வேறு வகையிலான ஆபரணப் பொருட்கள், சடங்குகளுக்கு
பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கல்மணிகள், அயல் நாட்டு மட்பாண்டங்கள்,
நாணயங்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட துண்டுகள்,
சுடுமண்ணுருவங்கள், இரும்பு பொருட்கள் என்பன சிறப்பாக குறிப்பிடத்தக்கன.
இத்தகைய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இபன்கட்டுவ பெருங்கற்கால
மையத்தில் நிலவிய புராதன மக்களது மொழி, எழுத்து, அரசியல், பொருளாதாரம்,
சமூகம், சமயம், மக்களது வாழ்வியல் அம்சங்ள், சடங்குகள், சம்பிரதாயங்கள்,
நாளாந்தம் பயன்படுத்தப்பட்ட பாவனைப் பொருட்கள், சவ அடக்க முறைகள், அயல்
நாடுகளுடன் கொண்ட தொடர்புகள், உலோகப் பாவனை, கலைமரபு போன்ற
விடயங்களை ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். இவ் ஆய்வின் துணை
நோக்கமாக இபன்கட்டுவ தொல்லியல் மையத்தின் காட்சிக் கூடம் தொடர்பாக
ஆராய்வதாகும். வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் விவரண ஆய்வாக
அமையப்பெற்ற இவ்வாய்விற்கு தேவையான தகவல்கள் முதல்நிலை தரவுகள்,
இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற அடிப்படையில் பெறப்பட்டன. அவ்வகையில்
நேர்காணல்கள், களஆய்வுகள் முதல்நிலைத் தரவுகள் என்ற வகையில் அடங்க
குறித்த இவ்விடயம் தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள்,
சஞ்சிகைகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவுள்ளன. |
en_US |