Abstract:
கட்டிளமைப் பருவத்தினர் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு
உள்ளாகின்ற தன்மை காணப்படுகின்றது. இங்கு குறிப்பாக பாடசாலை கட்டிளமைப்
பருவ ஆண் மாணவர்களின் உடல்விம்ப புலக்காட்சி என்பது அவர்களது
விருத்தியில் செல்வாக்கு செலுத்துகின்றது. அதனடிப்படையில் இவ் ஆய்வானது
யாழ்ப்பாணக் கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 12 –
19 வயது வரையான ஆண் மாணவர்கள் 1157 மாதிரிகளாக எழுமாற்று
அடிப்படையில் தெரிவு செய்து அவர்களிடமிருந்து ஆண்களின் உடல் மனப்பாங்கு
அளவீடு (Male Body Attitudes Scale), றொஸென்பேர்க் சுயமதிப்பிட்டு பட்டியல் (Rosenberg Self – Esteem Inventory),
சுயமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து
ஆகிய ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி தரவுகளானது
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் (Microsoft Excel,
SPSS ஆகிய மென்பொருட்களின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அதனடிப்படையில் கட்டிளமைப்பருவ ஆண் மாணவர்களின் உடல் விம்ப
திருப்தியின்மையானது 84.7 (Mean) ஆகவும் கட்டிளமைப் பருவத்தினரின் உடல்
விம்ப திருப்தியின்மை நிலைக்கும் சுயமதிப்பீட்டிற்கும் இடையில் மிதமான
எதிர்க்கணிய தொடர்பும் காணப்படுவதோடு உடல்விம்ப திருப்தியின்மையில்
வயதுவேறுபாட்டின் செல்வாக்கு குறைவாகக் காணப்படுகிறது இவர்களில் 61
வீதமானோர் தமது உடல் அமைப்பை மெருகூட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்
15 வீதமானோர் ஏனையோரால் ஒரு தடவையேனும் உடல் உருவக்கேலிக்கு
உள்ளாகியுள்ளனர் எனவும் முடிவு பெறப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது
மாணவர்களின் சுயமதிப்பீட்டினை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளையும்
முன்வைத்துள்ளது.