Abstract:
அம்பாரை மாவட்டத்தில் பல்லின சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவர்கள் தங்களது சமயத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து தங்களது வாழ்வியலை நடாத்தி வருகின்றனர். இவர்களது வாழ்வியல் அல்-குர் ஆன்இ ஹதீஸ் என்பவற்றில் கூறப்பட்ட கருத்துக்களை பிரதானமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை கள ஆய்வு
மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இவர்களது வாழ்வியலில் நாட்டுக்கவிகள்இ நாட்டார்
பாடல்கள்இ மாப்பிள்ளை பைத் (மாப்பிள்ளை வாழ்த்துப் பாடல்)இ களிகம்பு ஆட்டப்பாடல்கள்இ
முனாஜாத்துப் பாடல்கள்இ நாடகப் பாடல்கள்இ இஸ்லாமிய கீதங்கள்இ கவ்வாலி கீதங்கள் காவியங்கள்இ கப்பல் பாடல்இ பதம் பாடுதல்இ குரவை போடுதல் வசன நாடக அரங்குகள் என ஏராளமான கலைவடிவங்கள் ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. தற்காலத்தில்
அக்கரைப்பற்றுஇ கல்முனைக்குடிஇ மருதமுனைஇ இறக்காமம்இ அட்டாளைச்சேனை போன்ற
முஸ்லிம் ஊர்களில் ; இக்கலைகள் பயில் நிலையில் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில்
பார்க்கின்ற போது ஏனைய முஸ்லிம் ஊர்களில் கலைகளின் மீது இரசனைஇ ஈடுபாடுஇ ஆற்றுகை காவியங்கள்இ கப்பல் பாடல்இ பதம் பாடுதல்இ குரவை போடுதல் வசன நாடக அரங்குகள் என
ஏராளமான கலைவடிவங்கள் ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. தற்காலத்தில்
அக்கரைப்பற்றுஇ கல்முனைக்குடிஇ மருதமுனைஇ இறக்காமம்இ அட்டாளைச்சேனை போன்ற
முஸ்லிம் ஊர்களில் இக்கலைகள் பயில் நிலையில் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில்
பார்க்கின்ற போது ஏனைய முஸ்லிம் ஊர்களில் கலைகளின் மீது இரசனைஇ ஈடுபாடுஇ ஆற்றுகை அணுகுமுறைகள் ஊடாக மேற்கொள்ளப்படுன்றது. இவ் ஆய்வானது அம்பாரை மாவட்டத்தில்
காணப்படும் முஸ்லிம் கிராமங்களை ஆய்வு எல்லையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
கள ஆய்வில் பெறப்பட்ட கலைஞர்களது நேர்காணல்கள்இ ஆய்வேடுகள் என்பன முதன்மை
மூலாதாரங்களாகவும் முஸ்லீம் கலை வடிவங்களின் ஆற்றுகை இறுவட்டுகள்இ ஒலிப்பதிவு
நாடாக்கள் என்பன துணைமை மூலாதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இவ் ஆய்வுக்கட்டுரையின் கருதுகோளாக இஸ்லாமிய சமூகத்தினரை அடையாளப்படுத்தும்
கலைவடிவங்கள் இன்றும் பயில் நிலையில் காணப்படுகின்றன என்பதாகும்.