SEUIR Repository

தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் இலங்கையின் சமூகப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்

Show simple item record

dc.contributor.author உஷாந்தி, மகாலிங்கம்
dc.date.accessioned 2023-09-05T11:09:56Z
dc.date.available 2023-09-05T11:09:56Z
dc.date.issued 2023-05-03
dc.identifier.citation 11th International Symposium (IntSym 2023) "Managing Contemporary Issues for Sustainable Future through Multidisciplinary Research" Proceedings 03rd May 2023: South Eastern University of Sri Lanka. p. 439-446. en_US
dc.identifier.isbn 978-955-627-013-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6823
dc.description.abstract பல்லவர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் தொண்டை மண்டலத்தில் காஞ்சியை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசாக எழுச்சியடையத் தொடங்கியிருந்தனர். பல்லவரது ஆட்சிக்கு முன்னர் பெருமளவு பௌத்த, சமண மதங்களே செல்வாக்குடையவையாகக் காணப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்லவர்கள் காலத்தில் ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் தமிழகத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு எதிரான பக்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இது சைவத்தையும், தமிழையும் முதன்மையாகக் கொண்டு எழுச்சியடைந்ததனால் பௌத்தமும் சமணமும் நலிவடைந்து சைவ, வைணவ சமயங்கள் மறுமலர்ச்சியடைந்தன. இதுவரை காலமும் தமிழகத்தில் மண், சுதை போன்ற அழியக்கூடிய பொருட்களைக் கொண்டே கோயில்கள் அமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திலிருந்து தான் முதன்முதலில அழியாத பொருட்களைக் கொண்டு கோயில்கள் அமைக்கும் மரபு தோற்றம் பெற்றது. அதன் செல்வாக்கினால் இலங்கையிலும் பல்லவர் கலைமரபு சார்ந்த ஆலயங்கள் சமகாலத்தில் கட்டப்பட்டன. இவைதவிர தமிழகத்திலும், இலங்கையிலும் பிராமணர்கள் ஆலயங்களில் பூசை செய்யும் மரபு அறிமுகமாகியமை, கடல்சார் வணிகத்தில் வணிக கணங்களின் செல்வாக்கு, பல்லவர்காலக் கலைகளின் அறிமுகம் போன்றவை தமிழக பக்தி இயக்கத்தின் தோற்றத் தால் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாடுகளில ஏற்பட்டுக் கொண்ட மாற்றங்களாக திகழ்கின்றன. அந்தவகையில பல்வர்கால தமிழகத்துடன் இலங்கை கொண்டிருந்த தொடர்பினால் இலங்கையின் சமூக பண்பாட்டு அம்சங்களில் ஏற்பட்டுக் கொண்ட மாற்றங்களை இலக்கிய தொல்லியல சான்றுகளின் துணையுடன் எடுத்துக்காட்டுவது இவ் ஆய்வின் முக்கிய நோக்கமாகவுள்ளது. இவ்வாய்வுக்காக இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற வகையில இவ்வாய்வுத் தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளக் கட்டுரைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வரலாற்று விபரண ஆய்வு அணுகுமுறை அடிப்படையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. en_US
dc.subject பக்தி இயக்கம் en_US
dc.subject தமிழகம் en_US
dc.subject இனமுரண்பாடு en_US
dc.subject பல்லவர் காலம் en_US
dc.subject எழுச்சி en_US
dc.title தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் இலங்கையின் சமூகப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account