Abstract:
சமூகப் புறமொதுக்கல் தொடர்பான கோட்பாட்டு மற்றும் அனுபவ ரீதியான முன்னைய
ஆய்வுகளை மீளாய்வு செய்வதனையும் அவற்றிலிருந்து ஆய்வு இடைவெளியினை
அடையாளங்காண்பதையும் நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ள இவ்வாய்வானது பண்பு
ரீதியான முறையியலினை முற்றிலும் தழுவி நிற்கின்றது. இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு
மூலகங்களான நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இணையத்தள
ஆவணங்கள் போன்றன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்மீளாய்வானது விபரணப்
பகுப்பாய்வு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு கூற்றுக்கள் மற்றும் வரைபடங்களாக
விளக்கப்பட்டுள்ளன. கோட்பாட்டு ரீதியான ஆய்வுகள் மூலம் சமூக புறமொதுக்கலின்
வரையறை, பல்பரிமாணத்தன்மை மற்றும் சமூக புறமொதுக்கலின் அடையாளங்கள்
போன்றவையும் அனுபவ ரீதியான ஆய்வுகள் மூலம் உலக நாடுகள் சந்தித்துள்ள சமூகப்
புறமொதுக்கலின் அனுபவங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேலும் சமூகப்
புறமொதுக்களினை அளவிடும் சுட்டெண்களும் அவற்றினை பிரயோகித்துப் பார்ப்பதிலுள்ள
சவால்களும் குறித்த சமூகத்தின் அல்லது தேசத்தின் தன்மைக்கேற்ப மாறுபடக்கூடும் என்பதும்
இவ்வாய்வில் அறிய முடிந்தது. அத்துடன் சமூகப் புறமொதுக்கலானது வறுமை, கிராமிய
பகுதிகள், மற்றும் குற்றச் செயல்கள் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பினையும் சமூக
உள்ளீர்த்தல், சமூக ஒருங்கிணைவு மற்றும் சமூக ஒத்திசைவு போன்ற
கருத்தாடல்களிடையேயொரு பிணைப்பினை கொண்டிருப்பதனையும் இவ்வாய்வு
இணங்கண்டுள்ளது. இருப்பினும் சமூகப் புறமொதுக்கல் தொடர்பில் மிகச் சொற்பளவிலான
ஆய்வுகளே இலங்கையில் செய்யப்பட்டுள்ளமை எதிர்கால ஆய்வுகளுக்கான
இடைவெளியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது