Abstract:
கல்வி (Eduction) என்பது குழந்தைகளை மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் போன்ற
பண்புகளுடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். சான்றோர்களின் கூற்றின் படி இளைய
தலை முறையை முறையாக வழி நடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி
முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்ப காலங்களில் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல் மாணவர்கள்
சமத்துவமாக காணப்பட வேணடும் என்பதற்காக குருகுலகல்வி வழங்கப்பட்டது. குருகுலகல்வியில்
ஆன்மீக கல்வியே முக்கியமாக போதிக்கப்பட்டது. தற்காலத்தில் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கி
மனிதர்களின் உள்ளீர்ந்த தகைமைகளை வெளியில் கொணடு வருவதாக தற்கால கல்வி
வழங்கப்படுகிறது. கல்வி என்ற தமிழ் சொல் கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. கல்வியின்
ஆங்கில வடிவமான Education ஆனது educatio எனும் இலத்தின் மொழிச் சொல்லில் இருந்து
உருவானது. இது வளர்தல் எனும் பொருளை குறிக்கிறது. கல்வியின் உள்ளார்ந்த எண்ணக்கருக்களை
ஆராயும் இடத்து குருகுலகல்வி முறைகளுக்கும் தற்கால கல்வி முறைகளுக்கும் இடையில் வேறுபாடுகள்
பல காணப்படுகின்றன. ஆரம்பகால குருகுல கல்வி நடைமுறைகள் தற்கால கல்வி நடைமுறைகளில்
பின்பற்றப்படுகிறதா? என்பதும் இவ்விரு நடை முறைகளும் அடிப்படைகளில் ஒத்த தன்மைகளை
கொணட்னவா? என்பதும் ஆய்வு பிரச்சினைகளாக அமைந்தன. இவ்விரு நடைமுறைகளினதும்
அடிப்படை நோக்கங்களின் வேறுபாட்டுத்தன்மைகள் மற்றும் இவற்றின் வேறுபாட்டு தன்மையான
நோக்கங்கள் பற்றி இதுவரை ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடை வெளியினை அடிப்படையாக
கொண்டது இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப கால குருகுலகல்வி நடைமுறைகளை
இனங்காணப்தோடு தற்கால கல்வி நடை முறைகளையும் இனங்கணடு இவ்விரு நடை முறைகளில்
உள்ள இடைவினைகளை மதிப்பிட்டு சமுகத்தில் மக்கள் மத்தியில் கல்வி பெறும் முக்கியத்துவத்தினை
வெளிப்படுத்தல் என்பன ஆய்வின் நோக்கங்களாகும். இவ் ஆய்வில் ஒப்பிட்டு விபரண ஆய்வு முறை,
வரலாற்று ஆய்வு முறை, பகுப்பாய்வு முறை என்பன பயனப்டுத்தப்பட உள்ளன. கல்வி கற்றலின் பயன்
கல்வி கற்றலின் முக்கியத்துவம், கல்வி வழங்கும் முறைகள் கல்வி செயற்பாட்டின் அடிப்படை அம்சங்கள்
என்பவற்றின் வாயிலாக குருகுல கல்வி தற்கால கல்வி எனும் இரு கல்வி நடைமுறைகளும் மக்கள்
எண்ணங்களில் பலவகையாக எண்ணக்கருக்களை விதைக்கின்றன.