SEUIR Repository

பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைக்கான சமூக பொருளாதார உளவியல் காரணங்களும் அதன் விளைவுகளும் : சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவினை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author சுந்தரலிங்கம், கீர்த்திகா
dc.contributor.author பமீஸ், முஹம்மட் பௌவுஸ்தீன்
dc.date.accessioned 2024-01-01T06:03:28Z
dc.date.available 2024-01-01T06:03:28Z
dc.date.issued 2022-12-06
dc.identifier.citation 11th South Eastern University International Arts Research Symposium on “Coping with Current Crisis for the Sustainable Development with Partners in Excellence” on 06th December 2022. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 371-383. en_US
dc.identifier.isbn 978-624-5736-64-5
dc.identifier.isbn 978-624-5736-37-9
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6877
dc.description.abstract இன்று உலகளாவிய ரீதியில் தீவிரமடைந்துள்ள பிரச்சினைகளில் ஒன்றாக சார்ந்த சமூக பொருளாதார உள பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகளில் வீட்டு வன்முறை முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இன்று இவ்வீட்டு வன்முறையின் தாக்கம் குடும்பங்களிற்கு அப்பால் சமூக மட்டத்தில் பாரியதொரு பிரச்சினையாக மாறி வருகின்றது. ஆய்வின் பிரதான நோக்கமாக பெண்களிற்கெதிரான வீட்டுவன்முறைக்கான காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்வதுடன், அதனைத் தடுப்பதற்கான பரிந்துரைகளையும் முன்மொழிதலினை மையமாகக் கொண்டுள்ளது. ஆய்வானது கலப்பு முறை வடிவம் பயன்படுத்தப்பட்டடுள்ளது. முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானம், பிரதான தகவல் வழங்குனர் நேர்காணல், விடய ஆய்வு ஆகியனவும், இரண்டாம் நிலைத் தரவுகள் பிரதேச செயலக மற்றும் மாவட்டச் செயலக வீட்டு அறிக்கைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. பனிப்பந்து மாதிரியெடுப்பு முறையைப் பயன்படுத்தி ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில மையமாகக் கொண்டு (100) பேர் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டது. பண்பு ரீதியாக தகவல்களை கருப்பொருள் பகுப்பாய்வு அடிப்படையிலும் (Thematic Analysis) புள்ளிவிபரத்தரவுகளினைப் (SPSS) பயன்படுத்தி விபரணப் புள்ளிவிபரவியல் ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் பகுப்பாய்வின் அடிப்படையில் 2010-2018 விவாக வருடத்திற்குப்பட்டவர்கள் 22% வீட்டு வன்முறைக்குட்பட்டடிருப்பதையும், 77% இந்துக்களாவும், வயது அடிப்படையில் வீட்டு வன்முறைக்குபட்டபவர்களில் 27% னர் 31–35 வயதிற்குட்பட்டவர்களாகவும், 71% இடைநிலைக்கல்வி (6- 11) யையும், குடும்பத்தலைவரது தொழிலாக 19% உள்ளனர். இக்குடும்பங்களின் 25001-30000 உட்பட்ட 42% வருமானம் பெறக் கூடியவர்களாகவும் உள்ளனர். வீட்டிலே உள்ளவர்களிடையே ஏற்படுகின்ற சண்டைகள் தான் வீட்டு வன்முறை என 47% குறிப்பிட்டனர். பொருளாதார ரீதியிலான வீட்டு வன்முறைக்கு உட்பட்டதாக கூறிய 128 பெண்களில் ஒருவர் தமக்கு 2 அல்லது 3 சவால்கள் இருந்துள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தார்கள். பொருளாதார சவால்களை சமாளித்ததினைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து 20% மானோர் பெற்றோர் சகோதரர்களின் உதவியினைப் பெற்றும் 19% னோர் சீட்டுக்கட்டுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும், 14% மானோர் கடன் வாங்குதலினையும் பொறிமுறையாகக் கொண்டுள்ளனர். பாலியல் ரீதியிலான வீட்டு வன்முறைகுப்பட்டதாக 4% பதிலளித்ததுடன், 30% மானோர் நோயுற்றிருக்கும் வேளை பாலுறவிற்கு கட்டாயப்படுத்தலினை குறிப்பிட்டனர். சமூக ரீதியான 34% மானோர் பெரிதாக சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை எனக் குறிப்பிட்டனர். அதிகமானவர்கள் இவ்வன்முறை சார்ந்து 30% பிரதேச செயலகத்தினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். 67% மானோர் வீட்டு கௌரவம் பாதிப்படையும் என்பதனாலும், 14% மானோர் கணவன் என்பதாகவும் பதிலளித்துள்ளனர். ஆகவே பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைக்கான சமூக பொருளாதார உளவியல் காரணங்களும் அதன் விளைவுகளையும் கண்டறிந்துள்ளதுடன், வீட்டு வன்முறையைக் குறைப்பதற்கான பரிந்துரைகளினை ஆய்வானது முன்வைக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. en_US
dc.subject பெண்கள் en_US
dc.subject வீட்டு வன்முறை en_US
dc.subject சமூகக் காரணிகள் en_US
dc.subject பொருளாதாரக் காரணிகள் en_US
dc.subject உளவியல் காரணிகள் en_US
dc.subject விளைவுகள் en_US
dc.title பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைக்கான சமூக பொருளாதார உளவியல் காரணங்களும் அதன் விளைவுகளும் : சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவினை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account