dc.description.abstract |
வெள்ள அனர்த்தம் ஏற்பட அதிகரித்த மழைவீழ்ச்சி மட்டுமில்லாது, முறையற்ற பல மனித
நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. சொத்து சேதம், மற்றும் மனித உயிரிழப்பு ஆகிய
இரண்டின் அடிப்டையில் மிகவும் விலையுயர்ந்த பேரழிவுகளில் ஒன்றாக வெள்ளப்பெருக்கு
காணப்படுகிறது. இலங்கையும் இன்று அடிக்கடி வெள்ளப் பெருக்கு அபாயத்தை எதிர் நோக்கி வரும்
நாடாக மாறிவருகின்றது. ஆய்வுப் பகுதியான நிந்தவூர் பிரதேசமானது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை
மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கரையோரத் தாழ்நிலப் பிரதேசமாகும். இவ்வாய்வானது நிந்தவூர்
பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படுகின்ற தாக்கங்களை அடையாளப்படுத்துவதை பிரதான
நோக்கமாகவும் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சமூக-பொருளாதாரத் தாக்கங்களையும் தெளிவாக
அடையாளப்படுத்துவதோடு அவற்றை இழிவளவாக்கும் நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதை உப
நோக்கங்களாகவும் கொண்டு அமையப் பெற்றுள்ளது. வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் போன்ற
முதலாம் நிலைத் தரவுகளையும் இரண்டாம் நிலைத் தரவுகளாக காலநிலை அறிக்கைள், நிந்தவூர்
பிரதேச செயலக அறிக்கைகள், ஆண்டறிக்கை, வெள்ளம் தொடர்பான முன்னைய ஆய்வுகள்,
பத்திரிக்கைத் தகவல்கள், சஞ்சிகைகள் மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை
உள்ளடக்கியதாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Ms Excel மூலம் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு
ArcGIS 10.8 மென்பொருள் மூலம் ஆய்வுப் பிரதேசத்தின் வெள்ளஅனர்த்தத்தின் வீரியத் தன்மை
படமாக்கல் செய்யப்பட்டது. அத்தோடு ஆய்வுப் பிரதேசத்தில் சமூக-பொருளாதார ரீதியிலான பல்வேறு
தாக்கங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளப்பெருக்கினால் சூழல் மாசடைவை
ஏற்படுத்தும் காரணிகளில் 40% வடிகாலமைப்பு சீரின்மையே காணப்படுகிறது. 20% வடிகான்களில்
கழிவுகள் கொட்டப்படல் மற்றும் வடிகான்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமை காரணமாக உள்ளன.
அத்தோடு கழிவகற்றல் சீரின்மை மற்றும் கழிவுகள் ஈரநிலங்களில் கொட்டப்படடுவதும் 10% ஆக
காணப்படுகின்றது. மேலும் வெள்ள அனர்த்தத்தினால் 75%, 15%, 5% என நெற்பயிர்ச் செய்கை, வீட்டுத்
தோட்டம், கால்நடை வளர்ப்பு என்பன முறையே பாதிப்படைகின்றன. எனவேதான், ஆய்வுப் பிரதேசத்தில்
உள்ள வடிகான்களை சீராக முகாமை செய்தல், வடிகான்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்தல்,
பாதிக்கப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கும் காணி உரிமையாளர்களுக்கும் உரிய நஷ்டஈடு மற்றும்
கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் மூலமாக தாக்கங்களை இழிவளவாக்குவதற்கான
நடவடிக்கைகளை பரிந்துரைப்பதாக இவ் ஆய்வு அமையப் பெற்றுள்ளது. |
en_US |