Abstract:
வரலாற்றுவரைவியலில் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தி உருவான வரலாற்றுவரைவியல் பள்ளி
முறையொன்றாக, நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் திகழ்கின்றது. ஏனைய அறிவியல் துறைகளைப்
போலவே வரலாற்றினை கட்டியெழுப்பும் பல்வேறு வழிமுறைகளது தொகுப்பாக உள்ள வரலாற்று
வரைவியலிலும் பெரும் திருப்பு முனையாக அமையப் பெற்ற விஞ்ஞான திருப்பம் எனும் Scientific Turn
மூலம் வரலாற்றை பகுத்தறிவின் கண்ணோட்டத்தில் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வரலாற்றை
வளர்த்துவிட்ட ஒரு வரலாற்று வரைவியல் முறையாக நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல்
காணப்படுகின்றது. பிற்காலத்தில் இந்த நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் சில
வரலாற்றாசியரியர்களால் விமர்சிக்கப்பட்டவேளை அது தன்னை வளர்த்துக்கொண்டதுடன் மட்டுமன்றி
வரலாற்று வரைவியலில் Linguistic Turn எனும் மொழியியல் சார்ந்த திருப்பம் ஏற்படக் காரணியுமானது.
நேர்கட்சிவாத வரலாற்று வரைவியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காளராக வரலாற்றாசிரியர்
ஈ.எச்.கார் விளங்குகின்றார். ஆயினும் நேர்கட்சிவாத வரலாற்று வரைவியலின் பின்னர் வரலாற்று
வரைவியலில் உருவான பல பள்ளிகளது முன்னேற்றம் காரணமாக அவற்றின் வளர்ச்சிக்கு அடிப்படை
அமைத்துத் தந்த ஒரு பள்ளியான நேர்கட்சிவாத வரலாற்றுவரைவியல் தொடர்பாக கவனம்
செலுத்தப்படுவது குறைவாகவே உள்ளது. ஆகவே, நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் என்றால்
என்ன, அதனை வளர்த்துவிட்ட அறிஞர்கள், ஈ.எச்.கார் பார்வையில் வரலாற்று வரைவியலின் பண்புகள்
மற்றும் பிற்காலத்தில் இப்பள்ளி மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் என்பவற்றோடு அந்த
விமர்சனங்கள் வரலாற்று வரைவியலின் வளர்ச்சியில் எத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்தின என்பது
தொடர்பாகவும் இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. இவ்விபரணபகுப்பாய்விற்கு இரண்டாந்தர
மூலாதாரங்களாக நூல்கள், ஆய்வுரைகள், இணையம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.