Abstract:
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தம் தொடர்பான
வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 1951ஆம்
ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட ஏற்பாடுகளில் சில பால்நிலை
சமத்துவமின்மைக்கு வழிகோலியுள்ளதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
இவற்றுள் காழி நீதிமன்றங்களின் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட
முடியாத நிலை உள்ளமையும் ஒன்றாகும். அந்தவகையில்; பெண் காழி
நியமனம் தொடர்பான இஸ்லாமிய நோக்கை விளக்கி இலங்கையில் அதன்
நடைமுறைச் சாத்தியத்தைப் பரசிலிப்பதை இவ்வாய்வு தனது முதன்மை
நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வாய்;வுக்காக இரண்டாம் நிலைத் தரவுகளே
பயன்படுத்தப்பட்டுள்ளன. தகைமையை அடிப்படையாகக் கொண்டே காழி
நியமனங்கள் இடம்பெற வேண்டும் எனும் கருத்தையே இஸ்லாமிய
மூலாதாரங்கள் வலியுறுத்துகின்றன. அந்தவகையில் இந்நியமனங்களில்
பால்நிலை வேறுபாடு தொடர்பான திட்டவட்டமான எவ்வித வழிகாட்டல்களையும்
அவை குறிப்பிடவில்லை. ஆகவே, இஸ்லாமிய சட்டத்துறையில் குறிப்பாக
நீதிப்பரிபாலணத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களுக்கு நிகராக அல்லது
அவர்களை விடத் தேர்ச்சி பெற்ற பெண்கள் நேரடியாக காழிகளாக அல்லது
காழியின் ஆலோசகர்களாக நியமிக்கப்படலாம் என்பதையே இவ்வாய்வு தனது
பிரதான கண்டறிதலாகக் பரிந்துரைக்கிறது. பால்நிலை சமத்துவம், முஸ்லிம்
பெண்களின் பல்துறைசார் வகிபாகங்கள், சிறுபான்மைச் சூழலில் இஸ்லாமிய
~ரீஆவின் நடைமுறை மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் தொடர்பான
ஆய்வுகளுக்கு இதனை வாசிப்பாகக் கொள்ள முடியும்.