Abstract:
இக்கட்டுரை DDR (ஆயுதக் களைவு, குழுக்களைக் கலைத்தல், மீள ஒருங்கிணைத்தல் - Disarmament,Demobilization and Reintegration) செயன்முறை பற்றிய ஓர் ஆய்வாகும். மேலும் DDR குறித்த முன்னைய ஆய்வுகளின் சான்றுகள் மீளாய்வுக்குட்படுத்தப்படுவதுடன் அது எவ்வாறு பரவலடைந்துள்ளது
என்பதனையும் வெளிக்கொணர்கிறது. அத்துடன் யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் DDR செயன்முறை எவ்வாறு காணப்படுகிறது என்பது குறித்த நடைமுறை ஆய்வுகள் மீளாய்வுக்குட்படுத்தப்படுவது இன்றியமையாததாகும். அவ்வகையில் இக்கட்டுரை பண்புரீதியான முறையியலின் அடிப்படையில் விவரணப்பகுப்பாய்வன் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. DDR செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் நடைமுறைரீதியில் அவ்வரையறைகள் ஒழுங்குமுறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அத்துடன் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான DDRசெயன்முறையானது அரசாங்கத்தின் அதிகரித்த தலையீடு காரணமாக ஒரு சிக்கல் நிறைந்த செயல்முறையாக இடம்பெற்றிருக்கின்றதென்பது இவ்வாய்வின் முடிவாகும்.