Abstract:
இன்று தொழில்வாய்ப்புத் தேடி ஆண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தவிர்க்க முடியாத ஒரு
பொருளாதாரத் தேவையாக இருக்கின்ற அதேநேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு
சமூகப்பிரச்சினையாகவும் உருமாறியுள்ளது.பொருளீட்டல் என்பது ஆண்கள் மீதான பொறுப்பாகவும்
கடமையாகவும் இருப்பதனை மறுக்க முடியாது. அதற்காக அவர்கள் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவு செய்து கொள்கின்றனர். அவற்றுள் வெளிநாட்டிற்குச் சென்று பொருளீட்டுவதும் பிரதான வழிமுறைகளில் ஒன்றாகும்.குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமைகின்றது. இருந்த போதும் மறுபுறம் பல்வேறு சமூக குடும்பரீதியான பிரச்சினைகளுக்கும் இது
காரணமாக இருக்கின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை. குறிப்பிட்ட ஆய்வுப்பிரதேசத்தில் ஆண்கள் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்குச் சென்றமைக்கான காரணங்கள் ஆண்கள் வெளிநாட்டிற்குச் செல்வது
தொடர்பான அல்லது வெளிநாட்டில் வேலை செய்வது தொடர்பான அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விருப்புநிலை ஆண்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதனால் குடும்பவியல் ரீதியாக ஏற்பட்டுள்ள
தாக்கங்கள் அவர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்தததில் அடைந்த திருப்திநிலை போன்ற விடயங்களைக்கண்டறிவதனை
அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொருளீட்டல் தொடர்பான இஸ்லாமிய நோக்கினை தெளிவுபடுத்தி அதனூடாக இஸ்லாமிய அடிப்படையிலான குடும்ப வாழ்வை
அமைத்துக் கொள்ளவதற்கான ஆலோசனைகளை வழங்குவதனையும் அவற்றின் மூலம் சிறந்த குடும்ப
சமூக அமைப்பை கட்டியெழுப்புவதற்கு அவர்களைத் தயார்படுத்தலையும் இவ்வாய்வு கருத்திற்
கொண்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் நிலைத்தரவுகளை மாத்திரம் மையப்படுத்தியதாக
மேற்கொள்ளப்பட்டுள்ளது.