dc.description.abstract |
ஊடகவியல் கல்வி; என்பது சமூக அறிவியல், கலையியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுடனான மனித ஊடாட்டங்கள் கொண்டமைந்த தகவல் தொடர்பியல்சார் ஊடகங்களின் பன்முகப்பட்ட கல்வி முறையாகும். இது மக்கள் தொடர்பியல் சார்ந்த துறைகளான சமூகவியல், மானிடவியல், உளவியல், அரசறிவியல், மொழியியல், கல்வியியல், கலையியல், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான பல துறைகளுடனும்
தொடர்புபட்ட கல்வித்துறையாகும். இலங்கையை பொறுத்த வரையில் சமீப காலங்களில் சிங்கள மொழியில் துரிதமான வளர்ச்சிநிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் தமிழ்மொழியில் அவ்வாறில்லை. எமது நாட்டில் தரம் ஒன்பது தொடக்கம் பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் வரை ஊடகவியல்
கற்கைகள் கற்பிக்கப்படுகிறது. அதேபோன்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகள் வரை காணப்படுகிறது. இருந்த போதிலும் தமிழ்மொழியில் இதனது வளர்ச்சிநிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. ஆகவே, இதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றினடிப்படையில் இதனை தீர்த்து
வைப்பதற்கான வழிவகைகளை எடுத்துக்கூறி பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான அனைத்து மட்டங்களிலும் இப்பாடத்துறையை முழுமையான வகையில் தமிழ்மொழி மூலமாக ஆரம்பித்து அதனை சீரிய முறையில் வளர்த்துச் செல்வதற்கான தீர்வுகளையும் சிபார்சுகளையும் முன்வைப்பதாகவே இந்த ஆய்வு அமைகிறது. |
en_US |