dc.description.abstract |
வரலாற்று ஆராய்ச்சியில் செப்பேடுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன. அதாவது வரலாற்றினை
முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், வெளிநாட்டார்களது குறிப்புக்கள் போன்றவற்றுடன் செப்பேடுகளும் பிரதான பங்கினை வகிக்கின்றன. இவை அனைத்தையும் சான்றாக வைத்தே ஒரு பிரதேசத்தினது சரியான, முழுமையான
வரலாறு எழுதப்படல் வேண்டும். அந்தவகையில் தமிழகத்தின் வரலாற்றினைத் தெரிந்துகொள்வதில்
செப்பேடுகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
இத்தகைய செப்பேடுகள் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களதும் இந்துக்களதும் உறவின்
பிரதிபலிப்புக்களாகவும் உள்ளன. இவை அக்காலப்பகுதியில் வாழ்ந்தவந்த இவ்விரு மதத்தவர்களதும்
செயற்பாடுகள், உரிமைகள், வரலாற்றில் அவர்களது பங்களிப்புக்கள் மற்றும் அவர்களுக்கிடையிலான
இணக்கமான உறவுகள் போன்றவற்றினைத் தெளிவுபடுத்துகின்றன. இப்பின்னணியில் தமிழக வரலாற்றின்
முழுமையினைப் பூர்த்தி செய்வதில் இவ்விரு இனத்தவர்களாலும் காலத்திற்குக் காலம் வெளியிடப்பட்ட
செப்பேடுகளின் பங்கும் குறிப்பிடத்தக்கவகையில் அமைந்துள்ளன. |
en_US |