Abstract:
திருச்சிராப்பள்ளியில் சைவ வேளாளர் மரபில் கேடிலியப்பப்பிள்ளை, கஜவல்லி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தாயுமான சுவாமிகள். இவரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதிக்கு தாயுமானசுவாமி
திருப்பாடல்கள் என்று பெயர். இவரது பாடல்கள் திருவருள் பரசிவ வணக்கம் தொடக்கம் அகவல், வண்ணம் என ஐம்பத்தாறு தலைப்புக்களில் அமைந்துள்ளன. கி. பி 1792 இல் தமிழகத்தில் குணங்குடி என்ற ஊரில் நயினார் முகமது சாகிபு, பாத்திமா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் மஸ்தான் சாகிபு, காதிரியா நெறிப்படி வாழ்ந்த ஒரு சூஃபி ஆவார். இவரது பாடல்கள்
சூபித்துவ சிந்தனைகளின் வெளிப்பாடாக அமைந்திருப்பதனைக் காணலாம்.
தாயுமானவரின் திருப்பாடல்களைத் தழுவி, குணங்குடியாரின் திருப்பாடல்களும் அமைந்துள்ளன. கடவுளின்
சர்வ வியாபகம், அவதாரக் கோட்பாடு, நாயகன் நாயகி பாவம், மாயா தத்துவம், வினைக் கோட்பாடு, பஞ்ச
சுத்தி, அத்துவிதம், குண்டலினி சக்தி, அட்டமா சித்தி, அட்டாங்கயோகம், தவம், முத்தி, அனுபூதி, உருவ
வழிபாடு, குருபாரம்பரியம், சித்துநெறி, சன்மார்க்கம், மூர்த்தி, தல, தீர்த்த வழிபாடு எனப் பல அம்சங்களில்
இருவரது பாடல்களும் ஒற்றுமைப் படுகின்றன. அவற்றினை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.