Abstract:
இஸ்லாமிய நீதிப் பரிபாலன முறைமையில் தீர்ப்பளிக்கும் ஒழுங்கு மிகப் பிரதானமானதாகும். இந்தவகையில் நீதிபதியின் தீர்ப்பு நீதமானதாக, பக்கசார்பற்றதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் கரிசனை வலுவானதாகும். எனவே, நீதிபதி தீர்ப்பளிக்கும் போது வாதி, பிரதிவாதியுடன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், தீர்ப்புக்கான மூலாதாரங்கள், தீர்ப்பை வழங்கும் போது கொண்டிருக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் இஸ்லாமிய சட்ட மரபான ~ரீஆவின் பிரமாணங்களைத் தொகுத்தறிதலை இவ்வாய்வு பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பண்புசார் முறைமையிலான இவ்வாய்வு, இஸ்லாமிய
முன்னோடிக் காலங்களிலும், பின்னரும் பிரசுரிக்கப்பட்ட தீர்ப்பளிக்கும் ஒழுங்கு(அதப் அல்-கழா) பற்றிய பகுப்பாய்வினை அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. தீர்ப்பளித்தலுடன் தொடர்பான சட்ட ஒழுங்குகள் பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டல்களை நேர்த்தியாகக் கட்டமைத்திருப்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். இவ்வாய்வு நீதிபதிகள், காழி நீதவான்கள், சட்டத்தரணிகள்ää நடுவர்கள் போன்ற நீதிப்பரிபாலனத்துடன் தொடர்பானவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.