Abstract:
இன்று உலகில் மனிதனது வாழ்விலும் அவனது நடத்தையிலும் ஊடகங்களின் செல்வாக்கு மிக
அதிகமானதாகக் காணப்படுகின்றது. தொடர்பூடக சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஒவ்வொரு வீட்டிலும் இதன் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள்
கண்டுகளிக்கப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்ச்சியே தொலைக்காட்சித் தொடர்
நாடகங்கள் ஆகும். இதன் மூலம் நன்மை கிடைப்பதாக சில வாதங்கள் இடம் பெற்று வருகின்றபோதும்
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இது அவர்களது இஸ்லாமிய வாழ்வியலுக்கே பாரிய சவாலாகக்
காணப்படுகின்றது. இஸ்லாமிய குடும்பத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு இன்றியமையாததாகும்.
ஆனால் ஆய்வுப் பிரதேசத்தை பொறுத்தவரை முஸ்லிம் குடும்பத் தலைவிகள் குடும்பத்தை விட
தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் திளைப்பதனால் பல்வேறுபட்ட எதிர்மறைத் தாக்கங்களுக்கு
உள்ளாகின்றனர். இத்தாக்கங்கள் எவை? என இனங்கண்டு, அவற்றை குறைப்பதற்கான ஆலோசனைகள்
சிலவற்றை வழங்கி, தூய இஸ்லாமிய குடும்பத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் சமூகச் சீர்கேடுகளைத்
தவிர்க்கும் ஒரு முயற்சியாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இதற்காக முதல்நிலை, இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.