Abstract:
இவ்வாய்வு சமகால தொழில் நுட்ப மற்றும் தகவல் தொடர்பு யுகத்தின் மறு பக்கத்தின் சில
பகுதிகளைச் சுருக்கமாக ஆராய்கிறது. இது இவ்யுகத்தின் அறிவியல்சார் நுண்ணதிகார
அரசியலின் மறைகரச் செயற்பாட்டை துலக்கமுறச் செய்கிறது. இவ்வாய்வு மனிதன் இன்றைய
தொழில் நுட்ப மற்றும் தகவல் தொடர்பு யுகத்தின் அபரிமிதமான வளர்ச்சியினது தாக்கத்தின்
காரணமாக பேதலிக்கச் செய்யப்பட்டிருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன் அது
அவனுடைய பண்பாட்டை, நடத்தையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும் அது
அவனை வெறும் பாசாங்கான நடத்தைக் கோலத்திற்கு இட்டுச் சென்றுள்ளதையும்
விவாதிக்கிறது.