Abstract:
இவ்வாய்வு பொதுவாக ஒழுகக் வியலில் உள்ளவைகளை நியாயிப்பது பற்றிய பிரச்சினைகளை
பற்றி ஆராய்கிறது. மேலும் இது ஒழுக்கவியல் ஆராய்கின்ற விடயங்களின் விசேட
இயல்பினையும், பரிமாணங்களையும் தெளிவுபடுத்துகின்ற அதேநேரம் விஞ்ஞான நியாயித்தல்
முறையின் அடிப்படைகளையும் ஆராய்ந்து ஒழுக்கவியலில் உள்ளவைகளை நியாயிப்பதற்கு
விஞ்ஞான நியாயித்தல் முறை ஏற்புடையதன்று என வாதிக்கின்றது. விஞ்ஞானம் ஆராய்கிற
இயற்கை நிகழ்சி சம்பவங்களிலிருந்து ஒழுக்கவியல் ஆராய்கின்ற விடயங்களின் தன்மைகள்
வேறுபட்டிருப்பதால் அதனை நியாயிப்பதற்கு ஒரு விசேட முறை அவசியமாகும் என்பதை
இவ்வாய்வு உணர்த்துவதோடு, அதன் சாத்தியப்பாட்டினை இமானுவல் காண்ட்டினது
சிந்தனையின் துணை கொண்டு ஆராய்கிறது.