Abstract:
மட்டக்களப்பு மாவட்டமானது கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்த்தினால் பாதிக்கப்பட்டு இருந்த்து இருப்பினும் கடந்த மூன்று வருடங்களாக யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களது வாழ்வாதர மற்றும் சமூகப் பொருளாதார காரணிகளை மீள்கட்டமைக்கவேண்டிய நிலையில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் மாவடி வேம்பு-02 கிராம மக்களும் யுத்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதார மூலங்களை இழந்த நிலையில் இவ்வாய்வானது அவர்களது வாழ்வாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இக்கிராமத்தில் தற்போது காணப்படுகின்றதும் எதிர்காலத்தில் கிடைக்க்கூடியதுமான வளங்களை அடையாளம் காணலும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தலும் புதிய வாழ்வாதார தொழில்களை அறிமுகப்படுத்தலும் ஆய்வின் சிறப்பு நோக்கங்களாக அமைகின்றது.
இக்கிராமத்தில் மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார தொழில்களான விட்டுத்தோட்டம் சுயதொழில்,கால்நடைவளாப்பு, மட்பாண்ட கைதொழில்கள் மற்றும் நெற்பயிர்ச் செய்கை என்பவற்றின் அடிப்படையில் ஆய்வுப் பிரதேச மக்களிடம் இருந்து வினாக்கொத்து கலந்துரையாடல் பேட்டி முறை மூலம் தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்ட்டது.
ஆய்வின் முடிவுகளின் படி மக்களின் தொழில்களை தொடர்ந்து செய்வதில் காணப்படுகின்ற பொருளாதார பிரச்சைனைகளும் அத்தோடு தொழில்களுக்கு நவீன முறைகளும் கையாள்வதில் விழிப்புணர்வு குறைவாகவும் உட்கட்டமைப்பு வசதி குறைபாடு உடையதாகவும் காணப்படுகின்றது. எனவே இவ்வாறான நிலையில் இக்கிராமத்தின் மக்களுக்கு புதிய வாழ்வாதார தொழில்களை செயற்படுத்தி பயிற்சிகள் ஆலோசனைகள் விழிப்புணார்வுகள் வழிகாட்டல்களை மேற்கொள்ளுதலும் மற்றும் பொருளாதார வளங்களை இயன்றளவு பயன்படுத்தி வாழ்வாதார தொழில்களினால் வீட்டு வருமானத்தை அதிகிப்பதன் மூலம் வறுமையும் குறைவடைந்து இப்பிரதேசத்தில் சமூகப்பொருளாதாரச் செயற்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்டுத்தலாம்.