Abstract:
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அண்மைக்காலமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டினை தமது பொருளாதரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாய்வானது இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீடானது எத்தகைய தாக்கத்தினைச் செலுத்துகின்றது என்பதனை மதிப்பீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்விற்கு 1978 தொடக்கம் 2009ம் ஆண்டு வரையுள்ள காலத்தொடா தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்கு பன்மடங்கு பிற்செலவு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மாதியுருக்களினை மதிப்பிடுவதற்காக சாதரண இழிவு வர்க்க மதிப்பீட்டு முறை (OLS) பயன்படுத்தப்பட்டது. தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு Minitab,Excel,SAS, Eviews முதலிய கணனி மென்பாகப் பொதிகள் பயன்படுத்தப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீடானது புள்ளிவிபரீதியாக பொருளுள்ள வகையில் நேர்கணியத் தாக்கத்தினை கொணடுள்ளது என்பதனை ஆய்வு காட்டுகின்றது. இருப்பினும் இத்தாக்கமானது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்பே மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியின் மீது செல்வாக்கினை செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாய்வு யுத்த்த்தின் பின்னா இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முழுமையான பலனை அடைநடது கொள்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டினை கவர்வதில் எதர்நோக்கும் பிரச்சினைகளையும் விவசாயம் கைத்தொழில் சேவைகள் துறைகளில் சில பொருத்தமான துறைகளையும் அடையாளம் காணப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.