Abstract:
இவ்வாய்வுப் பிரதேசத்தின் கடற்கரை நிலத்தோற்றம் சமதரையாகவும் கடல்மட்டத்திலிருநது 10 உயரத்திற்கு உட்பட்டதாகவும் அலைவரிசையான வண்டல் சமதரையாகவும் அமைவதோடு கல்லோயா வடிநிலத்திலிருந்து பாயும் ஆறுகளையும் சிற்றாறுகளையும் கொண்டு காணப்படுகின்றது. இவ்வலயத்தில் செறிவான மழை காலங்களில் தாழ்வான நிலப்பகுதி வெள்ளத்தால் பாதிப்படைகின்றது. கடற்தின்னல் பிரதான இயற்கை காரணிகளால் ஏற்படுவதுடன் இப்பிரச்சினை சில பிரதேசங்களிலே மனிதனின் சிற்சில நடவடிக்கைகளினாலும் உக்கிரமடைகின்றது. மனிதனின் சில நடைமுறைகள் இயற்கையாக நடைபெறும் கரையோர செயற்பாடுகளை மாற்றுகின்றன. இதனால் கரையோரமும் கரையேரப் பிரதேசங்களும் அழிகின்றன. தின்னலைத் தூண்டும் இயற்கை காரணிகளான கடல்மட்டம உயர்தல் தரைமட்டம் கீழிறங்கல் சூறாவளி புயற்காற்று ஏற்படல் பாரிய வெள்ளப்பெருக்கும் அதிகமான மழைவீழ்சியும் நீண்டகால காலநிலை மாற்றம், ஆற்று முகத்துவாரங்கள் இடமபெயர்தல் கடலடியில் பூகம்பம் நிலநடுக்கம் சுனாமி ஏற்படல் போன்றவையும் இதனை ஊக்கப்படுத்துவதற்கான யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்களான துறைமுக அபிவிருத்தி மீள் கட்டட நிர்மாணம் போன்றவற்றினாலும் மானிட நடவடிக்கைகளான கரையிலிருந்து அதிகளவு மணல் அகழ்தல் ஆறுகளிலிருந்து அதிகளவு மணல் அகழ்தல் கரையோரத்தினை அண்டிய கடலில் புவியியல் வேறுபாடுகளை மாற்றுதல் கரையை அண்டிய பிரதேசங்களில் மற்றும் கரையோரக்கடலில் திட்டமிடப்படாத கட்டிட நிர்மானம் முறையாக திட்டமிடப்படாத கரையோர பாதுகாப்பு போன்றவற்றினாலும் கரையோரவலயத்தினையும் கரையோரசட்டத்தினையும் பேணவேண்டும் இப்பிரதேசத்தில் இயற்கையாகவும் மானிட நடவடிக்கைகளினாலும் ஏற்படுகின்ற கடற்தின்னல் அல்லது நிலச்சிரழிவினை குறைத்து சிறந்த கரையோர முகாமைத்துவ திட்டத்தினை ஏற்படுத்தல் கரையோரவலயத்தினால் ஏற்படுகின்ற கடற்ச்சட்டங்களை பேணி இயற்கை அழிவில்இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளல் இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக உள்ளது. பிராந்தியதின் பிரதேசசெயலகத்துடன் இணைந்த பிராந்திய கரையோரத்தின் சுழலைபாதுகாக்க நடவடிக்கை எடுக்க்கூடிய சாத்தியபாட்டை உருவாக்கலாம் அதனுடாக மேலதிகமாக மண் அகழ்வினை கட்டுப்படுத்த முடியும் இவ்வாய்வானது சுற்றுச்சுழல் ரீதியான ஆய்வாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாய்வினை மேற்கொள்ள பல்வேறு முறையியல் தரவுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது பெறப்பட்ட தரவினை புள்ளி முறைப்படி பகுப்பாய்வு செய்து இவ்வாய்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன.