Abstract:
கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டம் அமைந்துள்ளது. இது வட அகலாங்கு 6° 3” தொடக்கம் 7° 44” வரையும் கிழக்கு நெடுங்கோடு 80° 59” தொடக்கம் 81° 47” வரையுமான பகுதியில் அமைந்துள்ளதுடன் இப்பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கே மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை போன்ற மாவட்டங்களையும் மேற்கே மொனறாகலை மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களையும் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தையும் கிழக்கே இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தின் ஆய்வுக்குட்பட்ட 443,138 ஹெக்டயாகள் பரப்பளவைக் (4 431.38 சதுர கிலோ மீற்றா) கொண்டதாகும். இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 6.7 மூமாகக் காணப்படுகிறது.
இந்தப்பிரதேசத்தின் காட்டு வளமானது அழிக்கப்படுவதால் சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன். அதவது இக்காட்டு வளம் குடித்தொகை அதிகரிப்பினாலும், விவசாய, நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தியினாலும்,மரத்தளபாட தேவைக்காகவும் அழிக்கப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தின் காட்டு வளம் குறைவடைந்து சூழலியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவ்வாய்வின் நோக்கமாக அம்பாறை மாவட்டக் காடழிப்பைத் தடுத்து அதன் மூலம் நாட்டினை சூழல் தாக்கங்களிலிருந்து விடுபடச்செய்து அதன் பொருளாதார மேம்படுத்தலை ஏற்படுத்தலாம். இவ்வாய்வுக்காக .இரண்டாம் நிலைத் தரவினை பிரதான மூலமாகக் கொண்டும் முதலாம் நிலைத் தரவினை உப மூலகமாகக் கொண்டும் பகுப்பாய்வு முறையில் முறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றன.