Abstract:
இலங்கைப் பொருளாதாரத்தில் மிகப்பிரதான ஒரு துறையாக மீன்பிடிக்கைத்தெழில் காணப்படுவதுடன் இலங்கை மக்களின் உணவுத்தேவயினை பூர்த்தி செய்வதிலும் .இத்துறை குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றி வருகின்றது. அம்பாரை மாவட்டத்தில் காணப்பட்டுகின்ற பிரதான வளமாக் கடல் வளம் காணப்படுவதுடன் கடல் கரையை அண்டி வாழ்கின்ற மக்களின் பிராதான வாழ்வாதார நடவடிக்கையாகவும் மீன்பிடிக்கைத்தொழில் துறை காணப்படுகின்றது. எனினும் உள்நாட்டு போர் காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக இத்துறை பெரிதும் பின்தங்கிய ஒரு துறையாகவே மிக நீண்டகாலமாக காணம்பட்டது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இத்துறையினை மேம்படுத்துவதற்கான ஏற்பபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாய்வின் மிக முக்கிய நோக்கம் அம்பாரை மாவட்டத்தில் மீன்பிடிக்கைத்தெழில் துறை எதிர்நோக்கும் சவால்களை இனங்காண்பதும் அத்துறையினை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதுமாகும். ஆய்வுக்கு அவசியமான தகவல்களும்,தரவுகளும் நோக்கங்கள் மாதிரி எடுப்பு முறை இலக்குக்குழு கலந்துரையாடல் மற்றும் வினாக்கொத்து முறை மூலமும்,இரண்டாம் நிலைத்தரவுகள் கல்முனை கடற்றொழில் காரியாலயத்தின் பதிவேடுகள்மூலமும் திரட்டிக்கொள்ளப்பட்டன.சேகரிக்கப்பட்ட தரவுகள் வரைபடமுறை மற்றும் விவரணப் புள்ளிவிபரவியல் முறை என்பவற்றை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டன.
பகுப்பாயவின் பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் மூலதனப்பற்றாக்குறை குறைவான உட்கட்டமைப்பு வசதிகள் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் வினைத்திறன்வாய்ந்த ஊழியப்பற்றாக்குறை போன்ற பல சவால்கள் இனங்காணப்பட்ட. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் இத்துறையினை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலேசனைகள் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ள.