Abstract:
கற்றவர்கள் கல்லாதவர்கள் என்ற வேறுபாடு இன்றி விழுமியச்சிதைவு மிகுந்து காணப்படுவதை பார்க்க முடிகின்றது விஞ்சிய சுயகலப்பொக்கு மனித சமூகத்தை ஆக்கிரமித்து கொண்டிருப்பதை நாம் காணலாம் ஆக்கிரமித்தல் ஒப்பிடல் போட்டி அச்சத்தின் விளைவாக காணப்படும் பதட்டம் இயற்கையை பாழ்படுத்தும் மனப்பாங்கு வேற்றுமை மனப்பாங்கு இவையனைத்தும் மாணவர்களிடம் மிகுந்து விளங்குகின்றன மனித மனத்தின் அக வெளிப்பாட்டின் பிரதிபலிப்புத்தான் புற உலகம் பறத்தில் காணப்படும் வன்முறைகளுக்கு எல்லாம் அகத்தில் நிலவும் வன்முறை உணர்ச்சிகளே ஆதாரம். எனவே சீர்திருத்தம் அல்லது மாற்றம் அகத்திலிருந்து தொடங்கப்படுகின்ஙது இதற்கு கல்வியானது மிகப்பெரும் பங்களிப்பை தரமுடியும் இத்தகய சுழலில் மனிதநேய விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வது மிகவும் அவசியமாகின்றது வெறும்ஏட்டுக்கல்வி மட்டும் மாணவர்களிடையே நற்பண்புகளை மேம்படுத்தாது தேர்வை முன்வைத்து இயங்கும் கல்வி அமைப்புக்கள் இனி மனிதனை உருவாக்கவல்ல கல்வியை வழங்கவது அவசியம் மனிதம் சார்ந்த இத்தகைய நற்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சரியான கல்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகின்றது அதிலும் போருக்கு பின்னரான சுழலில் மனிதயே விழுமியங்கள் புரிந்துகொள்ளப்படுதல் கற்றுக்கொள்ளப்படுதலும் எமது சமூகத்தின் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கு வழிவகும் என்ற வகையில் இவ்வாய்வு இடம்பெறுகின்றது .இவ்வாய்வானது வினாகொத்து நேர்காணல் அவதானிப்பு என்ற வகையில் தரவுகளையும் ஆய்வுக்குரிய விழுமியங்களையும் உள்ளடக்கி வினாகொத்து ஒன்று தயாரிக்கப்படும் கல்வித்துறை வல்லுனாகளிடம் இவ்வினாகொத்து அளிக்கப்பட்டு அவர்களால் இதன் ஏற்புடமை உறுதிசெய்யப்படும் பாடசாலைக்கல்வி என்பது நற்பண்பகள் ஒரிங்கிணைந்த மனிதனை உருவாக்க உதவ வேண்டும் மாணவர்கள் அன்பும் மனித நேயமிக்கவாகளாக விளங்க வேண்டும் அப்போது மட்டுமே போரும் புசலுமற்ற ஒரு சமூதாயம் உருவாக்கப்படமுடியும். அதற்கான வழிகாட்டல்கள் ஆசியாகளால் வழங்கப்படவேண்டியது மிக அவசியம் அந்த வகையில் விழுமிய சீர்குலைவு காணப்படும் இன்றய சூழலில் இத்தகைய ஆய்வு அவசியமானது என்பது ஆய்வாளின் கருத்தாகும்.