Abstract:
சமகால சமூகவிஞ்ஞான ஆய்வுகளில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகள் மிகுந்த கவனத்திற்குட்பட்டு வருகின்றது. ஒரு சமூகத்தின் நிலைப்பிற்கும் அபிவிருத்திக்கும் சமூகம் சீரான செயற்பாட்டை கொண்டிருக்க வேண்டும். சமூகப்பிரச்சினைகள் சமூகத்தில் முகிழ்ப்பது இயல்பானது. அது தனிமனிதனின் நாளாந்த வாழ்வையும் சமூகவாழ்வையும் பாதிப்படையச்செய்யும். ஒரு சமுதாயத்தில் சமூக மூலதனம் சிறப்பான இயங்குதளத்தைக் கொண்டிருக்குபோதே சமூகத்தின் விடயங்கள் சிறப்பாக அமையும்.
அம்பாரை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சம்புநகர்கிராமம் ஆய்வுப்பிரதேசமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வுப்பிரதேசத்தில் வாழும் சமூகம் ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபட்ட பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஒரே நிலப்பரப்பில் நீண்டகாலம் வாழ்ந்து பின் இனக்கலவரச் சூழலில் வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியமர்த்தப்பட்டது. இக் குடும்பங்கள் மிக வறுமைக்குள்வாழும் குடும்பங்களாகவும் வலதுகுறைந்தோரையும் முதியவர்களையும் கொண்டதாகவும் வருடாவருடம் இயற்கை அனர்த்தத்திற்குட்படும் குடும்பங்களாகவும் உள்ளன . இப்பிரதேசத்தில் வாழும் ஏனைய குழுமங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் சமூகமாக இது அமைந்துள்ளது. இத்தகைய தனித்து அடையாளப்படுத்தப்படும் மீள்குடியேற்ற சமூகத்தில் நிலவும் சமூகப்பிரச்சினைகளையும் அதன் வடிவங்களையும் செயற்பாட்டுத் தாக்கங்களையும் அடையாளங்காணல் தனிமனித விழுமியங்களில் ஏற்பபடுத்திவரும் பலம் பலவீனங்களை அடையாளங்காணல் சமூகப்பிரச்சினைகள் சமூக மூலதனம் எனபவைகளுக்கிடையேயான தொடர்பினை அடையாளங்காணல். மக்களின் சிறந்த வாழ்வியலுக்கான வழிகளை ஆராய்தலும் பிரச்சினைகளைக் கையாளும் வழிகளைத்திட்டமிடலும் மீள்குடியேற்றப் பரதேசங்கயில் மீள்கட்டமைப்பு நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான வழிகளைத் திட்டமிடல்.
இவ்வாய்வுக்கு பண்புரீதியான தரரீதியான ஆய்வு நுட்பங்கள் கையளப்படுகின்றது. முதல் நிலைத் தரவிற்காக கள ஆய்வு முறை நேர்காணல் முறை வினாக்கொத்துமுறை விடயஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் நிலைத்தரவுகள் அறிக்கைகள் பத்திரிகைச் செய்திகள் நூல்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது இப்பிரதேசத்தில் காணப்படுப் சமூகப்பிரச்சினைகள் தனிமனித நடத்தைக் கோலங்களில் சிக்கல்தன்மைகளை உருவாக்கி வருகின்றது. இதனால் மேலும் இச்சமூகம் நலிவடைந்த நிலையினை நோக்கிச் செல்லாது தடுக்கவேண்டியகட்டாயம் சமூகத்தலைவர்கள் சமயத்தலைவர்கள் சமூக சிந்தனையாளர்களுக்குண்டு.