Abstract:
சுமார் மூன்றரை தசாப்த காலமாக ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியக் கண்டங்களில் இஸ்லாமிய நிதியியல் துறை உச்ச வளர்சியைப் பெற்று வருகிறது. 75 இற்கும் அதிகமான நாடுகளில் இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் காண்ப்படுகின்றன. இந்த வகையில் இலங்கையில் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவட்டமான அமபாறையில் இஸ்லாமிய நிதியியல் துறை வளர்சியடைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது இதனை அடிப்படையாகக் கொண்டு ”இஸ்லாமிய நிதியியல் துறை – போருக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்” எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் போருக்குப் பின்னர் இஸ்லாமிய நிதியியல் துறைச்செயற்பாட்டில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதனைப் பரீட்சிப்பதும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சித்திட்டங்களை கணடறிவதுமே இவ்வாய்வின் பிரதான நோக்கங்களாகும்.
இவ்வாய்வை மேற்கொள்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் காணப்படக்கூடிய இஸ்லாமிய நதி நிறுவனங்களில் பண்பு சார்ந்த தகவல்கள் (Qualitive Data ) பெற்றுக்கொள்ளப்பட்டன. இதற்காக நேர்காணல் முறை (Interview) மற்றும் வினாக்கொத்து முறை (Questionnaire) பயன்படுத்தப்பட்டது. இந்தவகையில் கல்முனை அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் காணப்படக்கூடிய இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தகவல்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டன. முடிவாக இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் போக்கில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை ஆய்வில் அறியப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் புதிய இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் தோற்றம் பாரம்பரிய வங்கிகளில் இஸ்லாமிய நிதிக் கிளைகளின் (Islamic Banking Windows) உருவாக்கம் உற்பத்திகளில் (Products) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முஸ்லிம்கள் வாடிக்கயில் (Customer Desire) கொண்டுள்ள நாட்டம் நிதி நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையின் (Reliablity) உயர்வு என்பவை இம்மாற்றங்களாக அமைந்துள்ளன.