Abstract:
சுமார் மூன்று தசாப்த காலமாக சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்று வந்த போர் மே 2009 இல் நிறைவு பெற்றது. அதன் பின்னர் சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களினூடாக வெளிவந்த கருத்துக்கள் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.
சிங்கள- தமிழ் முரண்பாட்டுச் சூழ்நிலையில் இருந்த இலங்கை இனப்பிரச்னை பின்னர் சிங்கள- தமிழ் மும்முனைப்பட்டதாக மாறியது. யுத்த முடிவுகள் இராணுவ ரீதியிலான சமநிலையை முற்றாகத் துடைத்தெறிந்த்துடன் சிறுபான்மையினர் பிரச்சினைகளை வேறு திசைக்கு நகர்தியது.
யுத்ததின் பின்னர் யுத்ததினால் ஏற்பபட்ட மீள் குடியமர்தல் முதலான புதிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே அரசு கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் வரலாற்று ரீதியாக இருந்து வந்த சிறுபான்மையினர் பிரச்சினை அப்படியே இருந்து வருகின்றது அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றன இச்சூழ்நிலையில் இப்பிரச்சினையில் இரண்டாம் தரப்பாக உள்ள முஸ்லிம்களின் கருத்து நிலை பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. யுத்ததின் பின்னர் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக முஸ்லிம்கள் கொணடுள்ள நிலைபாட்டை அறிந்துகொள்ளல். விவரணப் பகுப்பாய்வு அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ் ஆய்வுக்கான தரவு பிரதானமாகப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டமைகிறது மேலும் இது தொடர்பான நூல்கள் சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. யுத்தத்தின் பின்னர் சிறுபான்மையினரின் உண்மையான பிரச்சினைகள் திசை திருப்பப்பட்டுள்ளமை உண்மையான பிரச்சினைகளின்பால் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பொதுவான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் முதலான அம்சங்கள் இவ் ஆய்வின் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன.