SEUIR Repository

உறுகாமம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும் யுத்தத்திற்குப் பின்னரான உளநிலை மாற்றங்களும்

Show simple item record

dc.contributor.author Mahir, I.L.M
dc.contributor.author Jamali, S.M.H
dc.date.accessioned 2015-10-15T05:05:24Z
dc.date.available 2015-10-15T05:05:24Z
dc.date.issued 2011-04-19
dc.identifier.citation Proceedings of the 1st International Symposium 2011 on Post-War Economic Development through Science, Technology and Management, p. 155
dc.identifier.isbn 9789556270020
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1081
dc.description.abstract இலங்கையில் யுத்தத்திறகுப் பின்னரான சூழ்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவருவதனை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் மக்களின் உளப்பாங்கு மாற்றம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பன முக்கிய விடயங்களாகவுள்ளன. கடந்த யுத்த சூழலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வாழந்தனர். இத்தகையதொரு பின்னணியிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உறுகாமம் எனும் கிராமத்தில் வாழ்துவந்த முஸ்லிம் மக்கள் கடந்த யுத்த சூழலின் போது அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். தற்போதய சூழலில் இம்மக்களின் மனோ நிலையில் பல்வேறுபட்ட மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இதன்படி இம்மக்களின் உளநிலை மாற்றம் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து இவ்வாய்வு கவனம் செலுத்தியுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் உறுகாம பிரதேச முஸ்லிம் மக்களின் உளநிலையில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது? அது அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? என்ற அடிப்படையில் ஆய்வுக்கான பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாய்வினை மேற்கொள்வதற்கான நோக்கம் உறுகாமத்தில் வாழ்ந்துவந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை இனங்காண்பதும் யுத்த்த்திற்குப் பின்னரான சூழ்நிலையில அம்மக்களது உளப்பாங்கில் ஏற்பட்ட மாற்றங்களை அடையாளப்படுத்துவதுமாகும் இவ்வாய்வில் முதலாம் மற்றம் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணல் வினாக் கொத்து குழுக்கலந்துரையாடல்கள் போன்றவற்றினூடாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன தவிர இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள் இணையத்தளச் செய்திகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய தரவுகளின் மூலமாக இவ்வாய்வின் போது பெறப்பட்ட பிரதான முடிவாக இம்மக்கள் மீள்குடியேற்றத்திற்கு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுடன் யுத்ததிற்குப் பின்னரான சூழ்நிலையில் அவர்களது உளப்பாங்கில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுரையில் இந்நிலையினை வெற்றிகொள்வதற்கான சில சிபாரிசுகளையும் முன்மொழிகின்றது. en_US
dc.language.iso en_US en_US
dc.publisher South Eastern University of Sri Lanka en_US
dc.subject உளநிலை மாற்றம் மீள்குடியேற்றம். en_US
dc.title உறுகாமம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும் யுத்தத்திற்குப் பின்னரான உளநிலை மாற்றங்களும் en_US
dc.type Abstract en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account