Abstract:
இலங்கைச் சமூகமானது மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து தற்போது விடுபட்டாலும் அது இன்னும் எத்தனையோ சமூகப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. போதைவஸ்து வேலையின்மை சீதனம் முதியோர் துஷ்பிரயோகம் சிறுவர் துஷ்பிரயோகம் சூழல் மாசடைதல் போன்றவை அவற்றுள் சிலவாகும். இவற்றுள் குடும்ப உடைவும் குடும்ப சீரழிவும் முக்கியமானவை. இலங்கையை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு பல்தரப்பு முஸ்தீபுகள் முடிக்கிவிடப்பட்டிருக்கும் இவ்வேளையில் சமூக ரீதியாக்க் கட்டியெழுப்புவதற்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவேண்டும். சமூக ரீதியாக இலங்கையை கட்டியெழுப்பும் இப்பணி குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் அல்லாதபோது மீள்கட்டியெழுப்பும் பணி பூரணப்படாது. இந்த செயற்பாட்டை காழி நீதிமன்றங்கள் எவ்வாறு செய்துவ்ந்தன என்பதை இவ்வாய்வு விளக்குவதோடு அது எவ்வாறு முரண்பாடற்ற குடும்பத்தை உருவாக்குவதற்கு செயற்பட வேண்டும் எனவும் விளக்குகிறது குடும்பத்தில் தோன்றும் பிரச்சினைகளை தீர்ப்பதில் காழி நீதி மன்றங்கள் எத்தகைய பணியினை புரிகின்றன என்பதை பரிசீலித்தல் இவ்வாய்வின் நோக்கமாகவுள்ளது. பல்வேறு கல்வி நடவடிக்கைகள் ஆலோசனைகள் ஆற்றப்படுதல் (ஊழரளெநடபெ) நடவடிக்கை ஆன்மீகப் போதனைகள் போன்றவை இடம்பெற்ற போதிலும் பிலரச்சினைகள் குறிப்பாக கணவன்-மனைவி பிணக்குகள் குடும்பத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதில் காழி நீதிமன்றங்கள் எத்தகைய பங்களிப்பினைக் கொண்டுள்ளன என்ற கேள்விக்கு இவ்வாய்வு விடையளிக்கவுள்ளது.இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகள் (secondary data) எனும் இரு வழிமுறைகளில் தரவுகளைச்சேகரிக்கின்றது . முதலாம் நிலைத் தரவில் வினாக்கொத்து (questionnaire) பேட்டி காணல் (Interview) அவதானம் (Observation) இலக்குக் குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் (Focus Group Discussion-FGD) போன்றவை அடங்குகின்றன. அதேபோல் காழிநீதிமன்றங்கள் அதன் செயற்ப்பாடுகளுடன் தொடர்புள்ள (முநலகைகெழசஅயவௌ) 05 பேர் பேட்டி காணப்பட்டுள்ளனர். இரண்டாம் நிலைத்தரவில் காழி நீதிமன்ற தரவுகள் அடங்குகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு எண்ணளவான முறை (qualitative method) என்பவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகருக்குட்பட்ட குடும்பங்களில் ஏற்படும் பிணக்குகளை தீரத்து முரணபாடற்ற குடும்பத்தை உருவாக்குவதில் காழி நீதிமன்றங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்ற விடயம் இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.