Abstract:
பொதுவாக இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாவார். அவர்களே அச் சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களுமாவர். அவர்களின் கல்வி ஆளுமை ஒழுக்கம் தலமைத்துவப் பண்புகள் உயர்மனப்பாங்கு என்பன மிகவும் முக்கியமானவை. அவற்றினூடாக அவர்கள் நல்வழிப்படுத்தப்படும் போது அந்த சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அது முதலீடாக அமைகின்றது. முஸ்லிம் இளைஞர்களுள் புத்திஜீவிகளான பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பாகக்கொண்டிருக்கின்ற மனப்பான்மையும் சமூகப்பொறுப்புக்களை சுமந்து கொள்வதற்கான அவர்களின் தயார் நிலையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை நேரிடையாக (positive) அமையுமாயின் அது எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்குப் பயனளிக்கும். அவாகள் எதிர்மறையான (Nagative ) சிந்தனையும் செயற்பாடுகளும் கொணடிருப்பின் அது எதிர்கால முஸ்லிம் சந்ததியினரையும் பாதிக்கும். எனவே அதனை அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தமது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயற்படுகின்றனரா என்பதனை கண்டறிதல் பொதுவாக கள ஆய்வாக இது அமைந்துள்ளதால் முதற்தர தரவுகளான நோகாணல் கேள்விக்கொத்து அறிக்கைகள் புள்ளிவிபரங்கள் என்பவற்றினூடாக பெறப்படும் தகவல்களைப் பகுப்ப்பய்வு செய்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படும்.