Abstract:
அறபு மொழி முஸ்லிம்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒரு மொழியாகும். ஒரு முஸ்லிம் பிறந்ததும் கேட்கும் ”அதான்” ஓசையும் இறக்க முன்பு உரைக்கப்படும் ”கலிமா”வும் அறபியிலே அமைந்தவை. அறபியிலேயே அவன் அன்றாடம் தொழும் தொழுகையும் ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற அவனது முகமனும் அமைந்துள்ளன. அறபு மொழயின் இந்த இறுக்கமான தொடர்பின் காரணமாக முஸ்லிம்கள் வாழுமிடமெல்லாம் அறபு மொழியின் செல்வாக்கும் வியாபித்து காணப்படுகின்றது. முஸ்லிம்கள் தென் இந்தியா இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் மொழியை தாய்மொழயாகக் கொண்டு செயற்படுவதனால் அவர்கள் பல்வேறு மொழியியற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அவற்றுள் அவர்களின் சமய மொழியான அறபு மொழியை தமிழ் மொழியில கையாள்வதுடன் தொடரபான பிரச்சினை மிக முக்கியம் பெறுகின்றது. அறபு மொழியை சமயமொழியாக தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் அன்றாடம் பிரயோகித்து வருகின்றனர். அவாகளால் அறபுச் சொற்களை நன்கு உச்சரிக்கத் தெரியும் ஏனெனில் அவாகள் சிறு வயதிலிருந்தே அறபு மொழியை அல்குரஆனை பராயணம் செய்வதற்காக கற்கின்றனர். ஆனால் அறபுச் சொற்களையும் சொற்றொடர்களையும் தமிழில் எழுதும் போது அதற்கென ஒரு முறைமை காணப்படாதன் காரணமாக பல்வேறு விதமாக எழுதி வருகின்றனர். அவை உரிய உச்சரிப்பைக் கொடுப்பதாகவும் தெரியவில்லை உதாரணமாக : “நிராகரித்தான்” என்ற கருத்தை காட்டும் .... என்ற சொல்லையும் ”மன்னித்தான்” என்ற கருத்தைக் காட்டும் .... என்ற சொல்லையும் தமிழல் ”கபர” என்றே எழுதவேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் Arabic Transliteration இருப்பது போன்று தமிழில் இல்லாமையே இப்பிரச்சினைக்கு முக்க்கிய காரணமாகும். இத்தகைய தலைப்பில் இதற்கு முன்பு தனியான ஆய்வுகள் இடம்பெற்றதாக தெரியவில்லை எனவே புதிதாக Arabic Transliteration ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.