dc.contributor.author |
கலீல், எம்.ஐ. எம் |
|
dc.contributor.author |
மாதாசுரேஷ், வீ |
|
dc.date.accessioned |
2015-10-16T09:35:17Z |
|
dc.date.available |
2015-10-16T09:35:17Z |
|
dc.date.issued |
2011-04-19 |
|
dc.identifier.citation |
Proceedings of the 1st International Symposium 2011 on Post-War Economic Development through Science, Technology and Management, p. 100 |
|
dc.identifier.isbn |
9789556270020 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1111 |
|
dc.description.abstract |
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு வலயத்தில் ஒலுவில் வலயம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் ஒலுவில் கழியோழிடை பிரதேசம் பாலமுனை பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் துறைமுக அபிவிருத்தியினாலும் தென்கிழக்கு பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளினாலும் உயிரினப்பலவகைமையில் ஏற்படும் பாதிப்புக்களை அடையாளம் காண்பதுடன் அவற்றைப்பாதுகாப்பதற்கான வழமுறைகளையும் முன்வைப்பதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வின் நோக்கமாக ஒலுவில் துறைமுகப் பிரதேசத்தில் உயிர் பல்வகைமையை பாதுகாத்து சூழல் சமநிலையை பேணி நிலையான அபிவிருத்திக்கு வழிகோலுவதாகும். உயிரினப் பல்வகைமை என்பது புவி மேற்பரப்பின் வாழிடத்தை கொண்டிருக்கும் பலவேறு வகையான உயிர் வடிவங்களையே குறிக்கும். உயிர் வடிவங்கள் எனும்போது பல்வேறு இடங்களுக்கிடையில் காணப்படும் வாழிடம் பல்வகைத்தன்மை தனிப்பட்ட இனங்களின் பிறப்புரிமையில் பல்வகைத்தன்மை ஆகியவற்றை இது உள்ளடக்கும்
இப்பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளான ஒலுவில் துறைமுக அபிவிருத்தியும் சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமாணங்கள் நிலப்பயன்பாட்டு மாற்றம் நிலச் சீரழிவு விவசாசய மீன்பிடி நடவடிக்கைகள் போன்றவற்றினால் உயிரினைப் பல்வகைமை பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இவ்வாய்வுப் பிரதேசத்தில் சிக்கலான இடைவினையைக் கொண்ட சூழலின் .இயக்கத்திற்கு உயிரினப் பல்வகைமை இயக்கமானது முக்கியமான ஒன்றாக இருப்பது அவதானிக்கப்பட்டது. இவ்வாய்வானது வெளிக்கள ஆய்வுத்தரவுகளை பிரதான மூலமாகவும் .இரண்டாம்தர தகவல்களை துணைசாதனமாகவும் கொண்டு பகுப்பாய்வு முறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஒலுவில் சுற்றாடல் பிரதேசமானது காலநிலை நிலத்தோற்ற வேறுபாடுகள் மண்ணமைப்பு சாய்வான பள்ளாத்தாக்குப் பகுதிகள் காரணமாக ஈர வரண்ட வலயப்பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. அதாவது நன்னீர் ஏரிகள் ஆறுகள் கடல்நீரேரிகள் சதுப்பு நிலப்பகுதிகள் கொண்ட சூழல் தொகுதிகள் அமைந்துள்ளன. இங்கு காணப்படுகின்ற உயிரின வகைகளாகளாவன: தாவரங்கள் (70) மீனினங்கள் (30) ஈருடகவாழிகள் (10) ஊர்வன (25)பறவைகள் (70) பாலூட்டிகள் (14) கடல் மீனினங்கள் (40)நத்தை (25) ஆய்வுப்பிரதேசத்தின் நிலைத்து நிற்க்கும் அபிவிருத்தியைப் பேணுவதற்கு இவ்வுயிரனப்பல்வகைமையை பாதுகாப்பது அவசியமானதாகும்.உயிரினப் பல்வகைமை தொடர்சியாக இழக்கப்பட்டுவருமானால் அரிய தாவர விலங்கு இனங்களை இழக்க நேரிடுவதுடன் சூழலில் மனிதனின் வாழ்வு கூட கேள்விகுறியாகிவிடும். இந்தவகையில் இப்பகுதியில் இடம்பெறும் உயிர்ப்பல்வகைமை அதன் அழிவுகள் பாதுகாப்பு போன்ற விடயங்கள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இங்கு கூடுதாலான மரங்கள் வெட்டப்பட்டு கண்டல் தாவர சாகியங்கள் அழிக்கப்பட்டிருப்பதனால் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடம் உணவுத் தேவைகள் பாதிக்கப்பட்டதனால் உயிரனப் பல்வகைமை பாரிய பாதிப்பை எதிரநோக்க வேண்டியுள்ளது. இப்பிரதேசத்தின் நிலையான அபிவிருத்தியினைப் பேணுவதற்கு உயிரினப் பல்வகைமைப் பாதுகாப்பு இன்றியமையாததாகும். |
en_US |
dc.language.iso |
en_US |
en_US |
dc.publisher |
South Eastern University of Sri Lanka |
en_US |
dc.subject |
அபிவிருத்தி பல்லின உயிரினம் |
en_US |
dc.title |
அபிவிருத்திச் செயற்பாடுகளில் பல்லின உயிரினத் தன்மைகளின் பாதுகாப்பு பற்றி யுத்தத்திற்குப் பின்னரான ஒரு நோக்கு – கள ஆய்வு ஒலுவில் பிரதேசம் |
en_US |
dc.type |
Abstract |
en_US |