Abstract:
அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்புப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு. இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் அதிகளவான மக்கள் களப்பயிர்செய்கை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றார்கள் இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக களப்பயிர் உற்பத்தி குறைவடைந்து வருவதையும் உற்பத்தியில் ஈடுபடுவோரது எண்ணிக்கை குறைவடைந்து வருவதும் அறிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இந்நிலையினை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்விற்கான பிரச்சினை தோற்றம் பெறுகின்றது. இவ்வாய்வின் நோக்கங்களாக இத்தகைய களப்பயிச்செய்கையாளர்கள் எதிர் நோக்குகின்ற உற்பத்தி சந்தைப்படுத்தல் பிரச்சினைகளை கண்டறிவதும் அவற்றிற்கான தீர்வுகளை முன்வைப்பதுமாக அமைந்துள்ளன இந்நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக 100 களப்பயிர்ச்செய்கையாளர்கள் மாதிரியாக எடுக்கப்பட்டு வினாக்கொத்துக்கள் மூலமாகவும் நேரடியான கலந்துரையாடல்கள மூலமும் ஆய்விற்கான தகவல்கள் பெறப்பட்டன உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக உற்பத்தியாளர்களின் வருமானம் நோய்த்தாக்கங்களின் தன்மை தொழிநுட்ப வசதிகள் நீரினைப்பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் காலநிலைத் தாக்கங்களின் தன்மைகள் சந்தைச் செயற்பாடுகள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைத்தரகர்களின் தாக்கம் விலைத்தளம்பல்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இவ்வாய்வின் முடிவானது இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற களப்பயிர்ச்செய்கையாளர்கள் உற்பத்தி சந்தைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை உறுதிசெய்கின்றது. அதிலும் சிறப்பாக காலநிலைத்தாக்கம் விலைத்தளம்பல் சந்தை பற்றிய அறிவின்மை போக்குவரத்து என்பன பாரிய பிரச்சினையாக்க் காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு கமநல சேவைத் திணைக்களம் மற்றும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இவ்வாய்வின் முடிவாகக் காணப்படுகிறது.