Abstract:
கலைச் சிறப்பில்லாத காலகட்டம் மனித வாழவின் மங்கிய வரலாறாக்க் கருதப்படுகிறது. கலாசாரத்தின் சிறப்பையும் பண்பாட்டுத் தன்மைகளையும் கலைகளைக் கொண்டு அறியலாம். கலையைப் பற்றி விளக்கம் தரும் டி.வி நாராயணசாமி கலை என்பது மக்களது வாழ்வியலை பண்பாட்டை நாகரீகத்தை எடுத்துக் காட்டும் கண்ணாடி என்று எடுத்துக் காட்டுகிறார். மக்கள் வாழ வளர சமுதாய நீதிகளையும் அறத்தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டிட கலையைப் போல் வேறு சாதனம் இல்லை என்றும் கூறுகிறார். இவ்வாறான கலைகள் அறுபத்து நான்காக பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இசைக்கலை சிறப்புடைய கலைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இசையினை ஒரு மருத்துவ முறையாகக் கையாளலாம் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் உலகளாவிய ரீதியில் நிரூபித்துள்ளார்கள். எல்லா இராகங்களுக்கும் ஒரே தன்மை இருப்பதில்லை என்றும் இது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது என்பதும் தெரியவருகிறது. இதன் தன்மை மனிதனின் உணர்சிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. அதன் அடிப்படையில் இராகங்களின் இயற்கை உணா்சிகளை ஆராய்ந்து மருத்துவத்திற்கு உபயோகப் படுத்தும் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டுள்ளன. மன சமநிலை இல்லாமல் மன அழுத்தத்தினால் வேகம் கொண்டவர்வர்கள் இருதய குறைபாடு கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மன நோயால் பீடிக்கப்பட்டவர்கள் நினைவாற்றல் இழந்தவர்கள் உளவியல் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் அனைவருக்கும் இசை மருத்துவம் மூலம் குணமடைய செய்ய முடியும்.
ஒலியின் அடிப்படையில் அமைவது இசைக்கலை இசைக்கு விளக்கம் தரும் ச. வே. சுப்ரமணியண் பின்வருமாறு கூறுகிறார். ”செவிவழிப்புந்து இதய நாடிகளைத் தடவி உயிரினங்களை இசையவும் பொருத்தவும் வைக்கின்ற பொழுது இசை ஒலிகள் இசை என்ற பெயரைப் பெறுகின்றன” ஆகவே தற்போது எமது நாட்டில் போர் முடிவுற்ற நிலையில் பல மக்கள் மேற்குறிப்பிட்ட நோய்களால் இன்னல்கள் பட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இசை மருத்துவம் இசை வகுப்புக்களுடன் இணைந்த ஆயுள்வேத முறைகள் யோக பக்திமார்க்கம் எளிய உணவு எளிய வாழ்க்கை முறை ஆகியவற்றால் புத்துயிர் ஊட்டி அவர்களை சமூகத்தில் நற்பிரஜைகளாக்க முடியும் என்பது இக்கட்டுரை மூலம் வலியுத்தப்படுகிறது. உலக நாடுகளுடன் பாரக்கும் போது இலங்கையில் இசை மருத்துவம் இன்னமும் வளர்சியடையவில்லை. எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுமுக நிலையைக் கருத்திற்கொண்டு இசை மருத்துவத்திற்கு தேவையான நவீன இசை அதிர்வு உபகரணங்களான போன்றவற்றை இறக்குமதி செய்து பக்க விளைவுகளற்ற இம்மருததுவ முறையை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.