Abstract:
அம்பாரை மாவட்டக் கவிதைப்பாரம்பரியமானது மரபுக்கவிதை நவீன கவிதை புதுக்கவிதை என வளாசியடைந்திருப்பதை அவதானிக்கலாம் குறிப்பாக 1980 களில் பின் வெளிவந்த அம்பாரை மாவட்டக் கவிதைளில் இனமுரண்பாடு யுத்தமும் அதன் விளைவுகளும் சமாதானத்தின் தேவை சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கவிதைகள் வெளிவந்துள்ளன. இக்கவிதைப் பாரம்பரியமானது யுத்தம் முடிவடைந்த பிறகு மற்றுமொரு கோணத்தில் வளர்ந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது அவற்றை இனங்கண்டு வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகினறது.
1980களின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் வெளிவந்த கவிதைகளோடு யுத்தம் முடிவடைந்த பின்னர் அம்பாரை மாவட்டத்தில் வெளிவந்த கவிதைகள் ஒப்பீட்டு ரீதியில் ஆய்வு செய்யப்பட்டு அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்
இவ்வாய்வில் முதலாம் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகள் பத்திரிகைகள் சஞ்சிகைளில் வெளியான கவிதைகள் முதலியன இவ்வாய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
இவ்வாய்வில் வரலாற்றியல் சமூகவியல் ஒப்பியல் ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படவுள்ளன