SEUIR Repository

போருக்குப் பிந்திய அஷ்ரப் நகரில் பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்

Show simple item record

dc.contributor.author அய்யூப், எஸ்.எம்
dc.contributor.author றிஸ்வான், எம்
dc.date.accessioned 2015-10-19T09:38:50Z
dc.date.available 2015-10-19T09:38:50Z
dc.date.issued 2011-04-19
dc.identifier.citation Proceedings of the 1st International Symposium 2011 on Post-War Economic Development through Science, Technology and Management, p. 125
dc.identifier.isbn 9789556270020
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1131
dc.description.abstract இன்றய காலப்பகுதியில் இலங்கையிலும் சரி உலக நாடுகளிலும் சரி இடப்பெயர்வுகள் (Displacement) குடியமர்த்தல் (Resettlement) போன்ற செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. சுனாமி உள்நாட்டு யுத்தம் போன்ற அனர்த்தங்கள் காரணமாக மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படுகிறாரகள். அந்தவகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒலுவில் பிரதேசத்தில் காணப்படும் அஸ்றப் நகர் (Ashraff Nagar) எனும் கிராமம் முக்கியம் பெறுகின்றது. இங்கு மக்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களோடு சேர்த்து ஒலுவிலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அஸ்ரப் நகரில் வாழும் மக்களின் ஜீவனோபாயமானது நெற்செய்கை சிறு பயிர்ச் செய்கை மற்றும் மந்தை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. இச்செயற்பாடுகளில் பெண்கள் எந்தளவு பங்கு வகிக்கின்றார்கள் என்பதனையே இந்த ஆய்வு பிரதானமாக நோக்கவுள்ளது குறிப்பாக சிறுமிகள் இளம் பெண்கள் திருமணமான குடும்பப் பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோர் போருக்குப் பிந்திய இச்சூழலில் எத்தகைய பொருளதார பங்களிப்பினைச் செய்கிறார்கள் என்பதனை இவ்வாய்வு விளக்குகின்றது. பொதுவாக பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்கள் பெண்கள் என எல்லோரும் ஈடுபடுவது வழக்கம் எனினும் மீள்குடியேற்றம் அதிகம் நடக்கக்கூடிய கிராமப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களோடு சேர்த்து பெண்களும் அதிகம் ஈடுபடுவதனை அறியமுடிகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது அஸ்றப் நகரில் எத்தகைய பொருளாதார பங்களிப்பினை பெண்கள் ஆற்றுகிறார்கள் அதற்கான காரணங்கள் என்ன இந்நிலை எத்தகைய மாற்றங்களை அவர்களிலும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் சமூகங்களில் ஏற்படுத்தியுள்ளன என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடுகிறது. இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகள் (Primary data ) மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் (Secondary data) எனும் இரு வழிமுறைகளில் தரவுகளைச் சேகரிக்கின்றது. முதலாம் நிலைத்தரவில் வினாக்கொத்து (questionnaire ) பேட்டி காணல் (Interview) அவதானம் (Observation) இலக்குக் குழுக்களுடனான கலந்துரையாடல் (Focus Group Discussion -FGD) போன்றவை அடங்குகின்றன முதல் நிலைத் தரவில் 30 வினாக்கொத்துக்கள் எழுமாறாக (Random Sample) வைக்க்கப்பட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதபோல் அஸ்றப் நகர் பற்றித் தெரிந்த (Key informants) 05 பேர் பேட்டி காணப்பட்டுள்ளனர். மேலும் 02 இலக்குக் குழுக்களுடனான கலந்துரையாடல் மூலமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன இரண்டாம் நிலைத்தரவில் பிரதேச செயலக அறிக்கைகள் அடங்குகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளைக்கொண்டு எண்ணளவான முறை ( Quantitative method) மற்றும் தர அளவிலான முறை ( Quantitative method) என்வற்றின் அடிப்படையில் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. அஸ்றப் நகரில் வசிக்கும் பெண்களில் சிறுமிகள் இளம் பெண்கள் திருமணமான குடும்பப் பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள் என்போர் பல்வேறு வடிவங்களில் தமது பொருளாதார பங்கினை வழங்குகின்றனர் என்பது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது அத்துடன் இப்பெண்களின் ஈடுபாடானது அவர்கள் மத்தியிலும் வெளியிலும் ஏற்படுத்திய பல்வேறு அசையுகளையும் இவ்வாய்வானது அடையாளம் கண்டுள்ளது. en_US
dc.language.iso en_US en_US
dc.publisher South Eastern University of Sri Lanka en_US
dc.subject சிறுபயிரச்செய்கை (Crop cultivation) பெண்களின் வகிபங்கு (Womens’ role ) en_US
dc.title போருக்குப் பிந்திய அஷ்ரப் நகரில் பெண்களின் பொருளாதார செயற்பாடுகள் en_US
dc.type Abstract en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account