SEUIR Repository

இளைஞர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கங்கள் : இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீட மூன்றாம் வருட மாணவர்களை மையமாக கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author ஷமீரா, அப்துல் வாஹிட் பாதிமா
dc.contributor.author நாதிரா, அப்துல் குத்தூஸ் பாதிமா
dc.date.accessioned 2016-12-29T10:35:20Z
dc.date.available 2016-12-29T10:35:20Z
dc.date.issued 2016-12-20
dc.identifier.citation 6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 972-978. en_US
dc.identifier.isbn 978-955-627-097-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2040
dc.description.abstract “ஒரு கருத்தை அல்லது தகவலை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவியை ஊடகம்”; என வறையரை செய்யலாம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் இளைஞர்கள் முன்நிலையில் உள்ளனர். 15-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இன்று சமுக ஊடகங்களில் தங்கி வாழ்கின்றனர் என்று கூறலாம். அவ்வகையில் இவ்வாய்வானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றம் கலாச்சார பீட மூன்றாம் வருட மாணவர்களை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. சமுக ஊடகங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை இவ்வாய்வின் பிரச்சினையாகும். இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும்சமூக ஊடகங்களைக் கண்டறிதல், அவர்களின் சமூக ஊடகங்கள் நோக்கியதான அனுகுமுறையை மதிப்பிடல், இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் தாக்கங்களை இனங்காணல், இளைஞர்கள் சமூக ஊடகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான ஆலோசணைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தல் என்பனவே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வுக்காக அளவியல் மற்றும் பண்புத்தரவுகள் பெறப்பட்டன. முதலாம் நிலைப் பண்புத்தரவுகளாக நேர்காணல(25);, அவதானம், குழுக்கலந்துரையாடல்கள(04); மூலமும், அளவியல் தரவுகளாக வினாக்கொத்துக்கள்(30) மூலமும் தரவுகள் பெறப்பட்டன. இரண்டாம் நிலை தரவுகளாக ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளம் போன்றவற்றின் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு முதலாம் நிலை தரவுகள் கணனி மூலம் குறிப்பாக Excel package மூலம் எளிய புள்ளிவிபர முறையினூடே பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பெறப்பட்ட தரவுகளின் பெறுபேறாக பல்கலைக்கழக மாணவர்களது நடத்தையில் தொடர்பாடல் திறன், மொழித்திறன், சமூக உறவுகளை இணைத்தல், சமூக இடைவிணை அதிகரித்தல், உதவிப்பறிமாற்றம், உடனுக்குடன் தகவல்களை அறிதல் போன்ற நேரான தாக்கங்களையும், உடல் உள ரீதியான பாதிப்பு, நேர வீண்விரயம், கல்வியில் பின்னடைவு, அதிக செலவு, சமூக கலாச்சார விழுமியஙகளில் சீரழிவு போன்ற எதிர்மறையான தாக்கங்களும் இணங்காணப்பட்டன. சமூக ஊடகங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத அடிப்படை தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டதெனலாம். இச்சமூக ஊடகங்கள் அதன் தாக்கம், விளைவு தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். இதன் பாதிப்புக்ககளை உளவியலாளர்கள் சமூகத்திற்கு எத்திவைக்க வேண்டும். பல்கழைக்கழக நிர்வாகம் கல்வித்தேவைக்காக அமைத்துக் கொடுத்த வலைதள உதவிகளை கண்காணித்தல் போன்றன ஆய்வின் முடிவில் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டன. en_US
dc.language.iso en_US en_US
dc.publisher South Eastern University of Sri Lanka en_US
dc.subject இளைஞர்கள் en_US
dc.subject சமூக ஊடகம் en_US
dc.subject தாக்கம் பல்கழைக்கழகம் en_US
dc.title இளைஞர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கங்கள் : இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீட மூன்றாம் வருட மாணவர்களை மையமாக கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • 6th International Symposium - 2016 [126]
    This is the proceedings of 6th International Symposium held on 20 -21 December, 2016 at the South Eastern University of Sri Lanka

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account