Abstract:
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் எமக்கு கிடைத்த ஒன்றாக தொழில்நுட்பக் கலைகள் விளங்குகின்றன. தொழில்நுட்பக் கலைகளில் ஒன்றான தொலைக்காட்சியின் வருகை கலைத்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியால் பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது போல் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாய்வு தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்பத்தியுள்ள பாதகமான விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முயற்சியாக அமைகின்றது. தொலைக்காட்சித் தொடர்நாடகங்களின் தன்மை, அது சமூகத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது, மக்களுக்கு பிரயோகமான முறையில் தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள் அமைய வேண்டுமானால் அவை எவ்வாறான விடயப்பொருளைப் பேசவேண்டும், அதன் காட்சிப்புல யதார்த்தம் எவ்வாறானதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பனவற்றை நோக்காகக் கொண்டுள்ளது. இது சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக அமைவதால் பண்பு சார் ஆய்வு முறையியல் (Qualitative research design) இவ்வாய்வில் கையாளப்படுகின்றது.