Abstract:
இலங்கையின் வடமாகாணத்தின் உணவு உற்பத்தியில் குறிப்பாக அரிசி
உற்பத்தியும், மக்களின் பால், வயது வேறுபாடுகளுக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின்
அளவுகளும் கணிக்கப்பட்டு அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஆண்டிற்கு கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட பிரதேச செயலர் பிரிவு மட்டத்தில்
தன்னிறைவுப் போக்குகளும், பிரதேச செயலர் பிரிவுகளுக்கு இடையேயான
வேறுபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.