dc.description.abstract |
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என வகைப்படுத்தலாம்.
ஒரு தலைவனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கூறுவது பேரிலக்கியமாகும். சிலப்பதிகாரம்,
மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள்
பேரிலக்கியங்களாகும். உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்,
சூளாமணி, நீலகேசி என்பன சிற்றிலக்கியங்களாகும். அந்தவகையில் உலா, பள்ளு, தூது, பரணி,
குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், காவடிசிந்து, அந்தாதி, கலம்பகம், என தமிழில் தொன்னூற்றியாறு
வகையான சிற்றிலக்கியங்கள் உள்ளன. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், இறையடியார்கள்,
வள்ளல்கள், அரசர்கள், ஆகியோரை குழந்தையாக உருவகித்து, அவர்களை பாட்டுடைத்
தலைவர்களாகவோ தலைவியாகவோ பாவித்துப் போற்றிப் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடும்
சிற்றிலக்கிய வகையே பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். அந்தவகையில் முகமது நபி அவர்களை
பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரின் பெருமை கூறும் சிற்றிலக்கியமே மு. சண்முகம்
என்பவரால் இயற்றப்பட்ட நபிகள் நாதர் பிள்ளைத் தமிழாகும். இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களில்;
நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறித்து பரவலாக அறியப்படாத நிலையே
காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வின் நோக்கமாக, நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ்
இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கான பண்புகள் விரவியுள்ளதை அடையாளப்படுத்தலும்
இஸ்லாமிய இலக்கியம் என்ற வகையில் நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திலே,
பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கான பண்புகள் எடுத்துரைக்கப்படுவதனை தெளிவுப்படுத்தலும்
அமைகின்றன. மு.சண்முகம் அவர்களின் நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் பிரபந்த மூலமே ஆய்வின்
எல்லையாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது பண்பு சார் ஆய்வாகும். ஆய்வின் நோக்கத்தை
அடையும் பொருட்டு விவரண, ஒப்பியல் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்காக
முதலாம் நிலைத் தரவுகளாக மு.சண்முகம் அவர்களின் பிள்ளைத் தமிழ் இலக்கிய பிரபந்தப்
பாடல்களும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பிள்ளைத்தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள்,
இவ்வாய்வுடன் தொடர்புடைய ஏனைய ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தள செய்திகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இறுதியாக இவ்வாய்வானது இஸ்லாமிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சியில்
சிறப்பானதொரு முயற்சியாக அமையும், நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் பிரபந்தமானது பிள்ளைத்தமிழ்
பிரபந்தத்தின் அடிப்படைப் பண்புகள் விரவியுள்ளதாக உரைக்கும். |
en_US |