Abstract:
புனைக்கதை இலக்கியங்களுள் ஒன்றான நாவல் இலக்கியங்கள் சமூகத்தின் அனைத்து
விடயங்களையும் பிரதிபலிக்கும் ஒன்றாக கருதப்படுகின்றது. 1980 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில்
வாழ்ந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்து அறியக் கிடைக்கும் இலக்கிய
படைப்புக்களுள் ஜுனைதா ஷெரீபினால் எழுதப்பட்ட சாணைக் கூறை எனும் நாவல் குறிப்பிட்டுக்
கூற வேண்டிய ஒன்றாகும். இந்நாவலில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் சமூக, கலை, கலாச்சார,
பண்பாட்டு அம்சங்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்படுவதாக அமைந்துள்ளது. மேலும் அக்கால
மக்களின் மூட நம்பிக்கைகள், அறியாமை என்பவற்றினை எடுத்துக் காட்டுவதாக இந்நாவல்
அமைந்துள்ளது. இவ் வாய்வின் மூலம் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள்
எவ்வாறு இருந்தன என்பவை தொடர்பாக ஆராய்வதுடன் அக்கால மக்களின் அறியாமை மூட
நம்பிக்கைகளை ஆசிரியர் கேள்விக்குறியாக்கும் விதம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டள்ளது.
இதன் மூலம் ஜுனைதா ஷெரீபின் படைப்பாளுமை, சாணைக் கூறை நாவலின் தனித்துவம்,
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.