Abstract:
இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதார மந்தம் நிலவுகின்றது.இதற்கு முக்கிய காரணம்
முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்காகும்.ஏலவே கம்யூனிஸ சோஷலிஸ பொருளாதார கொள்கை
தோல்வி கண்டுவிட்டது.இப்போது முதலாளித்துவமும் தோல்வியடைந்து விட்டது என்பது நிரூபணமாகி
விட்டது. தற்போது முழு உலகத்திற்கும் ஒரு மாற்றுப் பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது.இந்த
நிலையில் தான் இஸ்லாமிய பொருளாதார ஒழுங்கு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்ந
வகையில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 350 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் வெற்றிகரமாக
செயற்பட்டுக் கொண்டு வருகின்றன.பொருளாதார மந்தத்தினால் இஸ்லாமிய நிதித்துறை நேரடியாகப்
பாதிக்கப்படவில்லை.மறைமுகமாக ஓரளவு பாதிக்கப்பட்டமையை மறுப்பதற்கில்லை. முஸ்லிம்களுக்கு
மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் இஸ்லாமிய நிதித்துறை பெரும் வரவேற்பைப்
பெற்ற ஒன்றாக மாறியிருக்கின்றது.அத்தோடு இத்துறைசார் வளவாளர்களுள் முஸ்லிம்
அல்லாதவர்களும் இருக்கின்றனர்.அவர்கள் இத்துறையில் நூல்களையும் எழுதியுள்ளனர். இந்தப்
பின்புலத்தில் இஸ்லாமிய நிதியியல் என்பது உலகளவில் வளர்ந்து வருகின்றது.இலங்கையிலும்
கடந்த இரண்டு தசாப்த காலங்களில் இஸ்லாமிய பொருளாதார ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு
ஏற்பட்டு வருகின்றது.இலங்கையில் சுமார் 10 நிதி நிறுனங்கள் இஸ்லாமிய நிதிச்சந்தையில் நல்ல
முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன. இலங்கையில் இஸ்லாமிய நிதியியல் துறை வளர்ந்து
வருகிறதா என்பதனையும் வளர்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பபடுகிறதா? என்பதனை
கண்டறிதல் இவ் ஆய்வின் நோக்கமாக காணப்படுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய நிதியியல்
துறை வளர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் வளர்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பபடுகிறது
என்பது இவ் ஆய்வின் முடிவாக பெறப்பட்டது.