Abstract:
இஸ்லாமிய வங்கித்துறையானது புதிதாக வந்த ஒரு துறையாக காணப்பட்டாலும் இஸ்லாமிய
பொருளாதார கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் பல நூற்றாண்டுகளிற்கு முன்னர்
உருவாகிவிட்டன. அந்த வகையில் இஸ்லாமிய ஷரிஆ சட்டத்திற்கு அமைவாக நிதி கொடுக்கல்
வாங்கல்களில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய வங்கி முறையானது தற்கால பொருளாதாரத்தில் முக்கிய
இடத்தை வகிக்கின்ற ஒன்றாக காணப்பட்ட போதிலும் எதிர்கால சமூகங்களாக உருவாகக் கூடிய
இக்கால முஸ்லிம் இளநிலைப்பட்டதாரிகளிடையே இத்தகைய இஸ்லாமிய வங்கிகள் தொடர்பாக
விழிப்புணர்வு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
இவ்வாய்வானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் காணப்படுகின்ற கலைப் பீடம், வர்த்தக
மற்றும் முகாமைத்துவப் பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் ஆகிய பீடங்களில்
இருந்து எழுமாறாக தலா 30 மாணவர்கள் வீதம் எடுக்கப்பட்;டு மொத்தமாக 90 மாணவர்களைக்
கொண்டமைந்த மாதிரியாகும். இவ்வாய்வானது தொகை ரீதியான தரவுகளைக் கொண்டதாக
அமைந்துள்ளதுடன் வினாக்கொத்து முறையில் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. இவ்;வாய்விற்கு
முதலாம்தர மற்றும் இரண்டாம்தர தரவுகள் சேகரிக்கப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் ஊடாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் காணப்படுகின்ற முஸ்லிம்
மாணவர்களிடையே இஸ்லாமிய வங்கியியல் தொடர்பான விழிப்புணர்வும், தெளிவும் குறைவாகவே
காணப்படுகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இஸ்லாமிய வங்கி முறை பற்றிய
விழிப்புணர்வூட்டல்கள் , கருத்தரங்குகள் மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வுகள் என்பன
மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகவுள்ளது. இதுவே இவ்வாய்வின்
முடிவாகப் பெறப்பட்டது.